சனி, 6 ஜனவரி, 2018

ரஜினி கமல் மலேசியாவில் நட்சத்திர ஷோ . அங்கும் ஆன்மீக அரசியல் .. அங்கு அதன் பெயர் இஸ்லாமிய அரசியல் ..

தினபூமி : சென்னை, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்காக தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசியா சென்றனர். இதையடுத்து மலேசியாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர், நிர்வாகிகள் கார்த்தி கருணாஸ், பூச்சி முருகன், குட்டி பத்மினி, ரோகினி, பசுபதி, ரமணா, நந்தா, உதயா, ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மலேசியாவில் இன்று 6ம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். மலேசியாவில் உள்ள புக்கிஜாலி அரங்கத்தில் இன்று மாலை இந்த கலை விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடனம், நகைச்சுவை, நடிகர், நடிகைகள் கலந்துரையாடல், சில தமிழ் படங்களின் பாடல் வெளியீட்டு விழா ஆகியவை இடம்பெறுகின்றன. முன்னதாக 6 அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. விஷால், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, ஜீவா ஆகியோர் தலைமையில் இந்த அணிகள் மோதுகின்றன. இது 10 ஓவர் போட்டியாக நடக்கிறது.


 இது தவிர மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது. ரஜினி, கமல் சந்திப்பு மலேசிய அரசின் உதவி, ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த கலைவிழாவில் ரஜினி, கமல் மற்றும் நடிகர், நடிகைகள், திரையுலக கலைஞர்கள் 340 பேர் பங்கேற்கிறார்கள். இதில் 200க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே மலேசியா சென்று விட்டனர். ரஜினி நேற்று முன்தினம் இரவு மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றார். அமெரிக்காவுக்கு சென்று இருந்த கமலஹாசன் நேற்று காலை சென்னை திரும்பினார்.

நேற்று மாலை மலேசியா சென்றார். ரஜினி, கமல் இருவரும் மலேசியாவில் சந்திக்கிறார்கள். ஒரே மேடையில் தோன்றுகிறார்கள். கமலின் கட்சி அறிவிப்பு! ரஜினி புதிய கட்சி தொடங்கியுள்ளார். கமல் புதிய கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் மலேசிய நட்சத்திர கலைவிழாவில் இருவரும் என்ன பேசுவார்கள், கமல் தனது அரசியல் கட்சி பற்றி அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து இந்த நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். எனவே இந்த விழாவில் மலேசிய பிரதமர் மற்றும் அந்நாட்டு மந்திரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் நேற்று மலேசியாவில் குவிந்தனர். விழா ஏற்பாடுகளை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அங்கு தங்கி இருந்து சிறப்பாக செய்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: