வெள்ளி, 5 ஜனவரி, 2018

கமல் அரசியலுக்கு வருவது உறுதியாம் ... தேர்தல் தமிழக சட்ட மன்றத்துக்கா இல்ல நடிகர் சங்கத்துக்கா ?

Kollywood,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,போட்டி,கமல்,திட்டவட்டம்தினமலர்: நடிகர் ரஜினி, அரசியலில் நுழைந்துள்ள நிலையில், அவருக்கு முன், அரசியல் அறிவிப்பு வெளியிட்ட கமல், 'தன் முடிவில் மாற்றம் இல்லை' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' மாநில அரசை விமர்சித்து, அரசியல் பதிவுகளை, கமல் வெளியிட்டு வந்தார். அதற்கு, அமைச்சர்கள் மற்றும், பா.ஜ.,வினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனிக்கட்சி துவங்கி, அரசியலில் குதிக்கப் போவதாக, கமல்< அறிவித்தார். அதற்கு முன், திரைப்பட பணிகளை முடிப்பதற்காக, அமெரிக்கா சென்றுள்ளார்.


இந்த சூழலில், நடிகர் ரஜினி, அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். அதை, 'டுவிட்டரில்' கமல் வரவேற்றார். எனினும், ரஜினி, கட்சி துவங்குவதாக அறிவித்தது, கமலுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதனால், ரஜினிக்கு போட்டியாக, அரசியலில் கமல் குதிப்பாரா என, சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அரசியலில் குதிப்பதை, கமல் உறுதி செயதுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: சென்னை, ஆர்.கே.நகர் தேர்தல், மிகப் பெரிய களங்கம். சென்னை வெள்ளத்தின்போது, மக்களாகிய நீங்கள் காட்டிய அன்பு, நெகிழச் செய்தது. அப்படிப்பட்ட நீங்கள், ஆளுங்கட்சி தந்த பணத்திற்கும், சுயேச்சை வேட்பாளர் தந்த, 20 ரூபாய், 'டோக்கனுக்கும்' விலை போகலாமா; அது, திருடனிடம் பிச்சை எடுப்பது போன்றது./>என் சினிமா பணிகளை முடித்துவிட்டு, அரசியலுக்கு செல்லவிருப்பதை அறிந்த, அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் பலர், அங்குள்ள வாய்ப்பை பட்டியலிட்டு, 'அரசியல் வேண்டாம்' என்கின்றனர். ஆனால், அரசியலுக்கு வரும் அவலத்திற்கு, என்னை இங்குள்ள சிலர் ஆளாக்கி விட்டனர். என் பழைய பேட்டிகளில் கூறியதைப் போல், அரசியலுக்கு வருவேன் என, மறுபடியும் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: