tamilthehindu :ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியானது வேறுபல முக்கிய
அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் அமைக்கும்
செயல்பாட்டையும் தூண்டியிருக்கிறது.
நியூயார்க்கிலுள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒப்புதல் பெற்றிருக்கிறார் மருத்துவர் பாலா சுவாமிநாதன். அதேபோல் கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்க இரண்டு மில்லியன் டாலர்கள் கொடுத்திருக்கிறார் புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழரான ரவி குகதாசன். இந்தப் புதிய முயற்சிகள் மூலம், ஹார்வர்டு தமிழ் இருக்கை உலகளாவிய தமிழர்களின் மொழி, பண்பாடு சார்ந்த ஒற்றுமை உணர்வாக மாறியிருப்பது தமிழ் பற்றாளர்களுக்கும், தமிழ்த் தொண்டர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூபாய் 40 கோடி) ஆதார நிதி தேவை. அதைத் திரட்டும் முயற்சிகள் தற்போது இலக்கை வெற்றிகரமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்திலும் தமிழர்கள் பரந்துவிரிந்து வாழும் உலக நாடுகள் பலவற்றிலும்
நன்கொடைகள் திரட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்தி வருகிறது
ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு. இந்த உயரிய நோக்கத்தை மக்கள் அறிந்திட
அவர்களிடம் இதைக் கொண்டு சேர்த்துவரும் பணியில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்
இணைந்து முன்னெடுத்து வருகிறது.
உலகத் தமிழர்களால் உருவாக்கப்படுகிறது என்ற உயரிய அம்சம் தமிழர்கள் அனைவரையும் பெருமைகொள்ளச் செய்துள்ளது. அவ்வகையில் ஹார்வர்டு பல்கலைக்கழகமும் தமிழர்களை ஆச்சரியத்துடன் நோக்கி வருகிறது.
இந்த அரிய வரலாற்று முயற்சி யில் உங்களையும் இணைத்துக்கொண்டு ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய, உங்களால் முடிந்த நிதியை அளிக்க harvardtamilchair.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று Donate பட்டனை அழுத்திச் செலுத்துங்கள்.
அரிய வரலாற்று முயற்சி
இன்றைய நிலவரப்படி தமிழ் இருக்கை அமைய இன்னும் ஆறரை லட்சம் டாலர்கள் தேவை. அதாவது, இந்தியப் பணத்துக்கு 5 கோடிக்கும் குறை வான தொகை. வெகு விரைவில் இந்த நிதி திரட்டப்பட்டு தமிழ் இருக்கை உருவாகும் என அமைப்பாளர்கள் நம்புகிறார்கள். ஹார்வர்டு இருக்கையானது ஒன்றிரண்டு செல்வந்தர்களால் மட்டும் உருவாக்கப்படவில்லை.உலகத் தமிழர்களால் உருவாக்கப்படுகிறது என்ற உயரிய அம்சம் தமிழர்கள் அனைவரையும் பெருமைகொள்ளச் செய்துள்ளது. அவ்வகையில் ஹார்வர்டு பல்கலைக்கழகமும் தமிழர்களை ஆச்சரியத்துடன் நோக்கி வருகிறது.
இந்த அரிய வரலாற்று முயற்சி யில் உங்களையும் இணைத்துக்கொண்டு ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய, உங்களால் முடிந்த நிதியை அளிக்க harvardtamilchair.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று Donate பட்டனை அழுத்திச் செலுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக