செவ்வாய், 10 மே, 2016

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம்.. நச்சுரல் சாய்ஸ்!

லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார், கோவை  உள்ள ஒரு அரங்கில் ‘ நட்புடன் வானதி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அதில், சிறப்பு விருந்தினராக லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.அவர் கூறும்போது “(பார்ப்பன)பெண்கள் துணிச்சலாக செயல்பட்டால்தான்  நாடு முன்னேறும். அதற்கு வானதி சீனிவாசன் உதாரணமாக திகழ்கிறார்.  
எல்லோரிடமும் எளிமையாக பழகும் அவரின் குணமும், அவரது செயல்பாடுகளும் என்னை ஈர்த்து வருகிறது. எனவே எந்த கட்சியையும் சாராத  (இந்த லொள்ளு தானே கூடாது)  நான் அவருக்கு ஆதரவாக உங்களிடம் வாக்கு கேட்கிறேன்.
வானதி துணிச்சாலாக போராடி இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றியுள்ளார். எனவே பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: