வியாழன், 12 மே, 2016

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி பிரமாண்ட வெற்றியை......15 தொகுதிகளை கைப்பற்றுகிறது N.R cong 6, Admk 5..

புதுச்சேரியில், காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதிகளை கைப்பற்றும் என நக்கீரன் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில், சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், புதுச்சேரி முழுக்க உள்ள தொகுதிகளிலும் வெற்றிபெறப் போகும் வேட்பாளர் யார் என்பது குறித்தும், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்றும் நக்கீரன் வாரம் இருமுறை வெளியாகும் இதழ் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதில், காங்கிரஸ் கூட்டணிக்கு 15 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளும், அதிமுகவுக்கு 5 தொகுதிகளும், கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 2 தொகுதிகள் மட்டும் இழுபறி நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பால் புதுச்சேரி திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி மகிழ்ச்சி அடைந்துள்ளது webdunia.com

கருத்துகள் இல்லை: