வெள்ளி, 13 மே, 2016

120 இடங்களில் திமுக வெற்றி..மக்கள் ஆய்வு அமைப்பின் கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 120 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைக்கும் என, மக்கள் ஆய்வு அமைப்பின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.< சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு அமைப்பினர், 177 தொகுதிகளில் கருத்துக்கணிப்புகளை நடத்தி, அதன் முடிவுகளை சென்னையில் இன்று வெளியிட்டனர்.< அதன்படி, திமுக 118 முதல் 120 தொகுதிகளிலும், அதிமுக 94 முதல் 96 இடங்கள் வரையிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி 8 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணிக்கு வாக்களிக்க 40.7 சதவீதம் பேரும், அதிமுகவிற்கு 31.8 சதவீதம் பேரும், தேமுதிக கூட்டணிக்கு 10.4 சதவீதம் பேரும், நோட்டாவிற்கு 5.5 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


திமுக அணி ஆட்சியமைக்க 42.7 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 36.6 சதவீதம் பேரும், தேமுதிக கூட்டணிக்கு 7.9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், கருத்துக்கணிப்பு கூறுகிறது.

கருணாநிதி முதலமைச்சராக 41.1 சதவீதம் பேரும், ஜெயலலிதா முதலமைச்சராக 31.7 சதவீதம் பேரும், விஜயகாந்த் முதலமைச்சராக 10.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  www.ns7.tv/t

கருத்துகள் இல்லை: