செவ்வாய், 10 மே, 2016

தலசீமியா நோய் .... மனுஸ்மிருதி .. அகமணம்...ஜாதிக்கு உள்ளேயே திருமணம்.. நூற்றுக்கு 90 பேர் இராணுவத்திற்கு இலாயக்கற்றவர்கள்

மரபணு முறையில் இந்நோய் பரவும் முறைசாதிகளுக்குள்ளான அகமண உறவு, சோடையான எதற்கும் லாயக்கற்ற சமூகத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது. 70 தலைமுறைகளுக்கும் மேலாக அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்து தர்ம சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிற மனுஸ்மிருதி அகமண உறவுமுறையை சமூகத்தில் நிலைநாட்டியிருப்பதை அறிவியல் மிகச்சமீபத்தில் ஐயந்திரிபற நிரூபித்துக்காட்டியது. அன்று தொடங்கிய சாபக்கேடு 2016 வரை நீடித்திருப்பது இந்த சமூகத்தின் அவமானமின்றி வேறல்ல.
மே எட்டாம் தேதி உலக ‘தலசீமியா’ தினமாக அனுசரிக்கப்படுகிறது என்று நாளிதழ்கள், விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டியிருக்கின்றன. தலசீமியா என்பது கொடிய மரபணுநோய் ஆகும். ஹிமோகுளோபின் புரதக் கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகள் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன. இதனால் இந்நோய் கண்ட குழந்தைகள் 2 வயதிலேயே இரத்த சோகையால் மரணமடைகின்றன. முதல் தலைமுறையில் ஒரு குழந்தை தன் பெற்றோரிடமிருந்து குறைபாடுடைய ஹிமோகுளோபின் மரபணுவை பெறுவதால் ஏற்படும் பாதிப்பை விட அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதாவது அக்குழந்தையின் பரம்பரை சந்ததிகளுக்கு இந்நோயின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  இதனால்தான் தமிழன் அன்றே சொன்னான் " யாதும் ஊரே யாவரும் கேளீர்(உறவினர்)"
மரபணு முறையில் இந்நோய் பரவும் முறை இதுவரை தலசீமியா நோய்க்கு இரண்டுவிதமான சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்களாம். முதல் வகையில் இரத்த சிவப்பணுக்கள் உருவாகும் எலும்பு மஜ்ஜையை மாற்றம் செய்வது. இந்தமுறை அனைவருக்கும் பொருத்தமானதல்ல என்பது ஒருபுறமிருக்க இம்முறைக்கு அரசு மருத்துவமனையிலேயே பத்து இலட்சம் ரூபாய் செலவு ஆகிறதாம். இதுவே அப்போல்லோவாக இருந்தால் எவ்வளவாகும் என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்று.
இரண்டாவது சிகிச்சை முறையில் தலசீமியா நோய் கொண்ட குழந்தைகளுக்கு மாதம் தோறும் புது இரத்தம் ஏற்றுவதுடன் அதிகப்படியான இரும்புச் சத்தை உடலில் இருந்து வெளியேற்ற ஆயுள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டுமாம். இத்தகைய கொடிய நோய்க்கு சிகிச்சை என்பதை விட வருமுன் காப்பது என்றவிதத்தில் இரண்டு முறைகளை பரிந்துரைக்கிறார்கள். முதல் முறையில் கருவிலேயே தலசீமியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கருவை அழிக்க வேண்டும்; இரண்டாவது முறையில் அகமண உறவு முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அகமண உறவுமுறையை அதாவது சாதிக்குள்ளே திருமணத்தை தவிருங்கள் என்று மருத்துவம் பார்ப்பனிய இந்துமத புனிதத்தை ரத்து செய்கிறது. இதன்படி ஸ்டெம் செல்லுக்கு மகாபாரதத்தில் குந்தியின் கருப்பிண்டத்தை சைட் செய்யும் ஸ்மிருதி இரானி, மோடி, ஆர்.எஸ்.எஸ் போன்றவர்கள் குற்றவாளிகளாகிறார்கள்.
அம்பேத்கர் சாதியை ஒழிப்பது எப்படி எனும் நூலில் இந்தியாவில் நூற்றுக்கு 90 பேர் இராணுவத்திற்கு இலாயக்கற்றவர்கள் என்று மதிப்பிடுவார். பல்லாயிரக்கணக்கான சாதிகளுக்குள்ளான அகமண உறவு, சோடையான எதற்கும் லாயக்கற்ற சமூகத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது. 70 தலைமுறைகளுக்கும் மேலாக அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்து தர்ம சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிற மனுஸ்மிருதி அகமண உறவுமுறையை சமூகத்தில் நிலைநாட்டியிருப்பதை அறிவியல் மிகச்சமீபத்தில் ஐயந்திரிபற நிரூபித்துக்காட்டியது. அன்று தொடங்கிய சாபக்கேடு 2016 வரை நீடித்திருப்பது இந்த சமூகத்தின் அவமானமின்றி வேறல்ல.
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - நன்றி தி இந்து
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் – நன்றி தி இந்து
மருத்துவர்கள் கூறுவதுபடியே ஒப்பீட்டளவில் தென்மாநிலங்களைவிட வடமாநிலங்களில் தலசீமியா மரபணு நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதை ஒப்பு நோக்கினால் பார்ப்பன பாசிசத்தின் வீரியம் வடக்கில் எந்தளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பது தெரியவரும். மாறாக பார்ப்பனியத்திற்கு மரண அடி கொடுத்த சாருவாகர்கள், சித்தர்கள், திராவிடர்களின் மரபுதான் ஓரளவிற்கு தலசீமியா மட்டுமல்ல பார்ப்பன உயர்சாதிகளிடையே ஒவ்வொரு வீட்டிலும் தலைக்கு ஒன்று என பரவலாயிருக்கிற பல்வேறு மரபணு நோய்கள், மூட்டுவாதம், முடக்குவாதம் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பல நோய்கள் உழைக்கும் மக்களை அண்டவிடாமல் காத்திருக்கிறது.
யாதூம் ஊரே யாவரும் கேளிர் என்றிருந்த தமிழ் பண்பாட்டில் பார்ப்பனிய விசச் செடி உள்நுழைந்த பொழுது காந்தர்வ மணத்தை இழிவென்று கருதி வள்ளியை வேசியாக்கி முருகனை சுப்ரமணிய ஐயராக்கி அரக்க தொல்குடிகளை சூரசம்ஹாரம் செய்து, அதற்கு பரிசாக பார்ப்பான் முன்னிலையில் வேதம் முழங்க இந்திரனின் மகள் தேவசேனையை தாரைவார்த்துக்கொடுத்து ஏகபத்தினியாக்கியதை பரிபாடல் பேசுகிறது. ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரியை விரட்டிய கதையாக பார்ப்பனியம் பண்பாட்டில், கலாச்சாரத்தில் இப்படித்தான் கெட்டிப்பட்டது.
விளைவு! சாதியத்தின் பிடி இறுகினால் சமூகமே இரத்த சோகையாக நிற்கும் என்பதற்கு தலசீமியா ஒரு தேர்ந்த உதாரணமாகும். இந்தவகையில் பார்ப்பனியம் மக்கள் மீது ஏவியிருக்கும் கொடூர சுரண்டல் வடிவம் தான் தலசீமியா எனும் மரபணு நோயாகும். குழந்தையின் இரத்தத்தையே குடிக்கும் கொடிய தேவராக பார்ப்பனிய இந்துமதம் மக்கள் மீது உயிரியல் போரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் பொழுது  கவுண்டச்சியின் கருவில் சக்கிலியின் விந்துவா என்று கேட்கும் சாதிப்புனிதம் எப்படி தலசீமியாவை ஒழிக்கும் என்பதற்கு எவர் ஒருவரும் பதில் சொல்லியாக வேண்டும்.
இன்றைக்கு திவ்யா-இளவரசன், கெளசல்யா-சங்கர், வனிதா-முருகேசன் போன்ற தம்பதிகள் வாழ்ந்திருந்தால் இவர்களின் மழலைகளின் கண்கள் பளிங்கு போல் இருப்பதுமட்டுமின்றி தலசீமியா நோயற்ற செல்வங்களாக தவழ்ந்திருக்கும். ஆனால் அதற்கு மக்களின் பண்பாட்டிலிருந்து இந்து பார்ப்பனியத்தை முற்று முழுதாக வெட்டியெறிய வேண்டியிருக்கிறது. இதுதான் தலசீமியா மரபணு நோய்க்கு எதிராக நம்முன் இருக்கும் ஒரே தீர்வு!
– இளங்கோ வினவு.com

கருத்துகள் இல்லை: