ஞாயிறு, 8 மே, 2016

கருத்துகணிப்புகள் நம்பதகுந்தவையா ? தமிழகத்தில் வெளியிடப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்து......

thenewsminute.com: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இரு முக்கிய செய்தி ஊடகங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பை வெளியிட்டுள்ளன. பாரம்பரியமான கணிப்புமுறைகள் இதில் வெளிப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தேர்தல் ஆணைய புகார் பிரிவின் போன்கள் ஓயாமால் ரிங் ஆகிக் கொண்டிருக்கின்றன. இந்த கருத்து கணிப்பு தேர்தல் முடிவில் பிரதிபலித்து விடுமோ என்ற பயத்தில் பலரும், கருத்து கணிப்புகளுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் முக்கிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட இந்த கருத்துகணிப்புகளை பல அரசியல் பார்வையாளர்களும் கூட கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்கள், இந்த கருத்துகணிப்புகள், அறிவியல்பூர்வமற்ற முறைகளை கொண்டு எடுக்கப்பட்டுள்ளன என கூறுகின்றனர்.

தினமலர் மற்றும் நியூஸ் 7 இணைந்து எடுக்கப்பட்ட கருத்துகணிப்பு கடந்த ஞாயிறு அன்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து ஒரு தொகுதிக்கு 1000 பேர் வீதம் 2.34 லட்சம் பேரிடம் கருத்துகணிப்பு எடுக்கப்பட்டதாக  ஊடகத்தினர் தெரிவித்தனர்.

ஆனால், இவர்கள் முழுமையாக  நேரிடையாக பலரிடம் சென்று கருத்துக்களை பெறவில்லை. கட்சிகளுடைய வரலாறு, போட்டியிடும் வேட்பாளரின் பலம் ஆகியவற்றையும் கணக்கிலெடுத்துள்ளனர். “ முதலில், இவர்கள் எடுக்கும் சர்வேக்கள் எதுவுமே பரவலான மாதிரிகளை அடிப்படையாக இல்லாமல் எடுக்கிறார்கள். ஒரு தொகுதியை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமெனில், நீங்கள் சமமான விகிதத்தில் ஒரு மாதிரியை எடுக்க வேண்டும் ” என விமர்சகர் ஒருவர் கூறுகிறார். நியூஸ் 7 சேனல் இதை தான் செய்திருக்கிறது. அவர்கள் சர்வே எடுப்பது ஆண்லைன் சர்வே எடுப்பது போல் ஆகிப் போனது.
நியூஸ் 7 சேனலும், எடுக்கப்பட்ட சர்வே அறிவியல்பூர்வமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. “ நாங்கள் ஜாதி, பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை பற்றிய தெளிவுடன் இந்த சர்வேயை எடுக்கவில்லை. நாங்கள் எங்கள் நியூஸ் 7 மற்றும் தினமலர் நிருபர்கள், கல்லூரி மாணவர்கள் உதவியுடன் இந்த சர்வேயை நடத்தினோம். எந்த கட்சியை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் ? என்ற ஒரேயொரு கேள்வியை மட்டுமே மக்களிடம் கேட்டோம்” என்கிறார் நியூஸ் 7 சீப் எடிட்டர் தில்லை.  அவர் மேலும் கூறுகையில் “ சர்வேயில் வெளியூர் ஆட்களை தவிர்க்க ரயில்வே ஸ்டேஷனுக்கோ அல்லது பஸ் நிலையங்களிலோ சென்று இந்த சர்வேவை எடுக்கவில்லை. ஆனால், மாநில மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முயற்சி செய்தோம்.” என்றார் அவர்.
“இந்த கணிப்புகள் தரமான மாதிரி முறைகளை பின்பற்றி எடுக்கப்படவில்லை. அப்படியிருக்க, உங்களிடம் அறிவியல்பூர்வமான முறைகள் இல்லாத போது, எப்படி நீங்கள் இந்த தரவுகளை விளக்க முடியும் ? “ என கேட்கிறார் மற்றொரு அரசியல் பார்வையாளர்.
இந்த சர்வேயானது, பெண்ணாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படுவார் என கூறுகிறது. “ அந்த தொகுதியில் அன்புமணி ராமதாசின் ஜாதியினர் மிகவும் வலுவாக உள்ள நிலையில் இந்த சர்வே, பரவலாக உள்ளவர்களை பிரதிநிதித்துவப்படுத்தாமல் ஏதோ ஒரு குழுவினரிடம் போய் எடுத்திருப்பதாக தெரிகிறது. மற்றொரு வகையில், திருப்பூர் போன்ற தொகுதிகளில், இடம் பெயர்ந்து வந்த மக்கள், பாரம்பரிய வாக்களிக்கும் முறைகளுடன் ஒத்து போகாமல் இருக்கலாம். பதிலளிப்பவர் நிரந்தரமாக குடியிருப்பவரா என்பதையும் இந்த சர்வே கணக்கில் எடுத்து கொள்ளவில்லை” என்கிறார் மற்றொரு அரசியல் விமர்சகர்.
அடுக்கடுக்கான கேள்விதாள்களை ஒரு குழுவாக இருக்கும் மக்களிடம் கொண்டு போய் எழுத வைத்தாலும் தவறான கணக்குகளே வரும். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,” கேள்விகளுக்கு பதிலளிப்பவர்கள்  தனிநபர்களாக பதிலளிப்பதில்லை. ஒரு நபர் எழுதுவதற்கு எதை தேர்வு செய்கிறாரோ அதுவே மற்றவர்களின் மீதும் செல்வாக்கு செலுத்தும்.” என்றார் அவர்.
இதுபோன்ற மற்றொரு கருத்துகணிப்பு தந்திடிவி, கிரிஷ் இன்போமீடியாவுடன் இணைந்து வெளியிட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் 150 பேர் வீதம் மாநிலம் முழுவதும் 35,600 பேரிடம் இந்த கணிப்பு எடுக்கப்பட்டது.
பரவலான மாதிரி முறையின் மூலம், இயன்றவரை தொகுதிவாசிகளை பிரதிநித்துவப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. “ நாங்கள் 4 பிரிவுகளை கொண்ட கேள்வித்தாள்களுடன், அதற்கு பதிலளிக்க போதுமான நேரம் உள்ள நபரகளை தேடி சென்றோம். கூட்டமாக இருப்பவர்களின் எதிர்வினைகள் எங்கள் தரவுகளில் இடம்பெறவில்லை.” என்றார் அந்த சர்வேயை முன்னின்று நடத்திய அருண் கிருஷ்ணமூர்த்தி. மேலும் அவர், இந்த சர்வே வெற்றி அல்லது தோல்வி பெறும் வேட்பாளர்களை பற்றிய ஆய்வுக்கு செல்லாமல், வாக்குகளின் போக்கு எப்படி இருக்கும் என்ற கோணத்திலேயே எடுக்கப்பட்டது என உறுதி செய்தார்.
பல ஏஜென்சிகளும் சர்வே எடுக்க துவங்கும் போது வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமான ஒன்று.” இந்த சர்வேக்களின் நம்பகத்தன்மை தான் என்ன ? இந்த சர்வேக்களின் நோக்கம் கேள்விக்குரியது.” என கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர். திருச்செந்தூரில், கேள்வித்தாள் கொண்டு செல்லப்பட்ட கவரானது நன்கு மூடப்படவில்லை எனவும், எனவே அந்த சர்வே நிராகரிக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஊடக சர்வே நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
தேர்தல் ஆணையம் இது போன்ற சர்வே எடுக்கும் ஏஜென்சிகளிடம் அவர்கள் சர்வே எடுக்கும் முறைகளை குறித்து விளக்கமளிக்க வலியுறுத்த வேண்டும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். “ சில குறிப்பிட்ட அளவிலான வாக்காளர்கள் இந்த சர்வே பலன்களையே கணக்கில் எடுக்கும் போது மற்ற சிலரோ, இந்த பலன்களால் தவித்து போய்விடுகின்றனர்.” என மேலும் கூறுகிறார் அந்த மூத்த பத்திரிக்கையாளர்.
இது குறித்து கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், “ நாங்கள் எங்கள் சர்வே முறைகளை வெளிப்படுத்தி அவற்றை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கவும் தயாராகவே இருக்கிறோம். “ என்றார் .

கருத்துகள் இல்லை: