செவ்வாய், 10 மே, 2016

பலே பாட்டி ! ஒரே பாட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கால்ஷீட் கொடுத்து நடித்தார்

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் பிரச்சார வீடியோவிலும், ஒரே வயதான மூதாட்டி நடித்துள்ளது தெரிய வந்துள்ளதை அடுத்து இணையவாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் தங்களது பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர்.மேலும், முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தாங்கள், தங்களது தொலைக்காட்சி நிறுவனங்களில் தங்களது கட்சிக்கு வாக்களிக்கும்படி விளம்பர வீடியோக்களை ஒளிபரப்பி வருகின்றன.
இந்நிலையில், ஆளும் அதிமுகவின் சாதனையை விளக்கி, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படியும், அதே மூதாட்டி அதிமுக ஆட்சியின் அவலத்தை விளக்கி திமுகவிற்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படியும் கூறுகிறார்.

இரண்டு கட்சிகளின் பிரச்சார வீடியோவிலும், ஒரு மூதாட்டி பேசியதை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.’தேர்தலில்தான் மக்கள் முட்டாளாக்கப்படுவார்கள் என்று பார்த்தால்,  விளம்பரத்துலயுமா?’ என்று ஒருவர் கூறியுள்ளார்.

வெப்துனியா.in

கருத்துகள் இல்லை: