செவ்வாய், 10 மே, 2016

ஜெயலலிதா : செய்வீர்களா செய்வீர்களா ? திமுகவை ஓட ஓட விரட்டி அடியுங்கள் செய்வீர்களா ....?

வேலூர்: தமிழகத்தில் அனைவருக்கும் தரமான கல்வியை அதிமுக அரசு வழங்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் இடையூறு இன்றி கல்வி கற்க திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்று அரக்கோணத்தில் பிரச்சாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஊழல் கூட்டணியான திமுக - காங்கிரஸ் கட்சியினர் வாக்கு கேட்டு வந்தால் விரட்டியடியுங்கள்... செய்வீர்களா? செய்வீர்களா என்று முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களிடம் கேட்டார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே வேடல் கிராமத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட மேடையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னையில் இருந்து ஜெயலலிதா அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி விமானதளத்திற்கு இன்று மாலை தனி விமானத்தில் வந்த ஜெயலலிதா, அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேடல் பகுதியில் பிரசாரம் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தார். ஹெலிபேடு தளத்தில் இருந்து கார் மூலம் பிரச்சார மேடைக்கு வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.


பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கீழ்வைத்தியணான்குப்பம் (தனி), போளூர், ஆரணி, செங்கம் (தனி), கலசபாக்கம் ஆகிய 17 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசியதாவது, •அதிமுக அரசு ஏழை, எளியோர்களின் நலன் காக்கும் அரசு •வளர்ச்சியின் பலன் ஒவ்வொருவரையும் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன் •அனைவருக்கும் தரமான கல்வியை அதிமுக அரசு வழங்கியுள்ளது
•பள்ளி மாணவர்கள் இடையூறு இன்றி கல்வி கற்க திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்
•கட்டணமில்லாத கல்வி வழங்கப்படுகிறது
 •இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்படுகிறது
•கல்வி உபகரணங்கள், காலணி வழங்கப்படுகிறது •சுவையான சத்தான உணவு, மிதிவண்டி வழங்கப்படுகிறது
•கல்வி ஊக்கத்தொகை, மடிக்கணினி வழங்கப்படுகிறது •மாணவர்களின் புத்தக சுமை குறைக்கப்பட்டுள்ளது
•பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது, பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு உயர்த்தப்பட்டுள்ளது
 •மாணவர்களின் கல்வி திறன் உயர தொடர்ந்து வழிவகை காணப்படும்
•திமுக இந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கவில்லை •தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 54 புதிய கல்லூரிகளை தொடங்கியுள்ளோம் •முதல்தலைமுறை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் வழங்கப்படுகிறது •தமிழகம் பள்ளிக்கல்வி, உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது •மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்த திமுக முயற்சி
•ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வி பெற அதிமுக அரசு நடவடிக்கை •தனியார் பள்ளிகளில் நலிவுற்ற மாணவர்கள் பயில நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
 •ஏழை மாணவர்களின் கல்விக்கு திமுக வேட்டு வைக்க முயற்சி செய்கிறது •ஓட்டு கேட்டு திமுகவினர் வந்தால் அவர்களை ஓட ஓட விரட்டியடியுங்கள் •ஏழைகளின் மருத்துவத்திற்காக உயரிய மருத்துவக்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது
•ஒரு குடும்பத்திற்கு 4 ஆண்டுகளுக்கு ரூ. 4லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறலாம்
•இந்த திட்டத்தை மாற்றி திமுக 4ஆண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் ஆக குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது
•காங்கிரஸ் - திமுக கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்றுதான் பொருள்
•மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணிதான் காங்கிரஸ் - திமுக கூட்டணி •எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என மத்தியிலும் ஊழல் ஆட்சியை நடத்தி வந்தனர்
 •தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை அடித்தவர்கள் திமுகவினர் •2ஜி ஸ்பெக்ட்ரமில் இமாலய ஊழல் செய்தவர்கள் திமுகவினர்
•ஊழலையே தொழிலாக கொண்ட திமுகவினர் வாக்கு சேகரித்து வந்தால் ஓட ஓட விரட்டுங்கள். செய்வீர்களா? செய்வீர்களா என்று ஜெயலலிதா கேட்கவே கூட்டம் ஆர்பரித்தது. தொடர்ந்து ஜெயலலிதா, அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பட்டியலிட்டு பேசினார்.

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: