செவ்வாய், 10 மே, 2016

அம்மா கட்சி பணம் விநியோகம்... பிடித்து கொடுத்தும் போலீஸ் விடுவித்தது....

சென்னை, அண்ணாநகரில் அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவுக்கு ஆதரவாக அதிமுகவினர் தெரு தெருவாக இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் வினியோகிப்பதாக மற்ற கட்சியினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த இருவரை பிடித்து டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறிது நேரத்தில் அவர்களை விசாரித்துவிட்டு காவல்துறையினர் விடுவித்தாக தகவல் பரவியதும், திமுகவினர் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அண்ணாநகரில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும மதிமுக வேட்பாளர் மல்லிகா, தனது கூட்டணி கட்சியினருடன் அமைந்தரை மார்க்கெட் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டார். மறியலின்போது விடுவித்தவர்களை கைது செய்யக்கோரி முழக்கங்கள் எழுப்பினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடபட்டனர். விடுவித்தவர்களை கைது செய்வதாக வாக்குறுதி அளித்ததும், மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

சென்னை, அ படங்கள்: அசோக்<

கருத்துகள் இல்லை: