திங்கள், 9 மே, 2016

பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளி கல்லால் அடித்து கொலை : திருநெல்வேலில் பரபரப்பு

திருநெல்வேலி,மே 09 (டி.என்.எஸ்) கற்பழிப்பு வழக்கில் முதல் குற்றவாலியான நபர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அருகேயுள்ள மணிமூத்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுடலைமுத்து (28). இவர் தற்போது தச்சநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பெண்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
சில மாதங்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதல் குற்றவாளியான சுடலைமுத்து கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை சுடலைமுத்து சொந்த ஊருக்கு திரும்பினராம்.
இதனிடையே திங்கள்கிழமை வடக்கு புறவழிச்சாலையில் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சுடலைமுத்துவின் முகத்தில் கல்லால் தாக்கியதற்கான அடையாளம் காணப்பட்டது. மேலும் அவரது மர்ம உறுப்பு அறுத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தகவலறிந்த திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ஆர். திருஞானம், துணை ஆணையர் பி. ராஜன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. விரல்ரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக சுடலைமுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் தனிப்படை போலீஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  //tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: