தஞ்சையை அடுத்த பாபநாசத்தின் பூண்டி என்ற பகுதியில் நடந்த சோதனையில் 500 போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சேலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த வாகனத்தை பாபநாசத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்திய போது, வாகனத்தில் ஏராளமான போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவை பறிமுதல் செய்யப் பட்டு, பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக் கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக முருகேசன் (45) ஓட்டுநர், ரமேஷ் க்ளீனர் ஆகியோரை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக