வியாழன், 12 மே, 2016

மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது: மு.க.அழகிரி

சென்னை: நடைபெறவிருக்கும் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது, முன்னாள் அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி கூறினார்.
தில்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், திமுகவுக்கு என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியவில்லை என்றார்.
மே 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தான் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை என்றும் அவர் கூறினார்.

மதுரையில் எத்தனை தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற கேள்விக்கு, ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது என்றார் 'அஞ்சா நெஞ்சன்' அழகிரி.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அப்போது மத்திய அமைச்சராக இருந்த அழகிரி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.
தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அவர், பிரசாரத்துக்கு செல்லவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தவிர வைகோ உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டது குறிப்பிடத்தக்கது.  தினமணி.com

கருத்துகள் இல்லை: