நடைபெறவிருக்கின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் திமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையிலும் திமுகவிலும் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் உதயகுமார், மாஜி மேயர் தேன்மொழி கணவர் கோபி, எம்.எல்.ராஜ், முன்னாள் மத்திய தொகுதி எம்.எல்.ஏ. கவுஸ்பாட்ஷா, ஆரப்பாளையம் வட்டச் செயலாளர் கண்ணன் ஆகியோர் மதுரையின் அனைத்து தொகுதிகளிலும், திமுக கரைவேட்டி கட்டிக்கொண்டு அதிமுகவுக்கு ஓட்டு கேட்டு வருவதாக தகவல் வந்தது.
தகவல் வந்ததும், அதை உறுதிப்படுத்திக்கொள்ள நேரில் சென்றபோது, புகைப்பட ஆதாரங் களூடன் திமுகவுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து வருவது உறுதியானது.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து உதயகுமாரிடம் பேசியபோது, ‘’நீங்கள் நினைக்கிறமாதிரி அந்த மாதிரி நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை’’ என்று சொல்லிவிட்டார்.
பின்னர் கோபியிடம் இது குறித்துபேசியபோது, ‘’அண்ணே ( மு.க.அழகிரி) என்ன சொல்றாரோ அதை நாங்க செய்யுறோம்’’ என்று கூறினார்.
மணிமாறன், தியாகராஜன், தளபதி, மூர்த்தி உட்பட மதுரை தொகுதியின் ஸ்டாலின் ஆதரவாளர்கள், ’’அழகிரி ஆதரவாளர்களின் இந்த முயற்சி வெற்றிபெறாது. நாங்கள் தான் வெற்றி பெறுவோம்’’ என்று கூறி வருகின்றனர்.நக்கீரன்,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக