
பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறுவதற்காக, வங்கதேசத்தில் 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் மோதியுர் ரகுமான் நிஜாமி. அவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக, வங்கதேசத்தில் உள்ள சர்வதேச போர்க்குற்ற நடுவர் நீதிமன்றம், கடந்த 2014-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.அவரது தலைமையிலான அல்-பதர் ஆயுதக் குழுவினர் நிகழ்த்திய கொடூரமான படுகொலைகள், சித்திரவதைகள், பிற குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்து.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து, வங்கதேச உச்ச நீதிமன்றத்தில் அவர் அடுத்தடுத்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், கடைசியாக அவர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த வியாழக்கிழமை உறுதி செய்தது.
இந்நிலையில், டாக்கா நகரில் உள்ள மத்திய சிறையில் ரகுமான் நிஜாமியை அவரது மனைவி, மகன்கள், மருமகள்கள் உள்ளிட்ட உறவினர்கள் 20 பேர் செவ்வாய்க்கிழமை இறுதியாக சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சிறையதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, ரகுமான் நிஜாமி தூக்கிலிடப்பட்டார். தினமணி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக