மதுரை,
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை பிரிக்கமுடியாது என்று மதுரை பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இரட்டை குழந்தைகள்
மதுரை
யாதவர் கல்லூரி எதிரில் நேற்று நடந்த தி.மு.க.- காங்கிரஸ் பிரசார பொதுக்
கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டு,
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர்
பேசியதாவது:-
காங்கிரஸ்-தி.மு.க. ஆகிய 2
கட்சிகளும், தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், சகோதர மனப்பான்மையுடன் செயல்பட
வேண்டும் என்ற கொள்கைகளுடன் இருக்கின்றன. இந்த 2 கட்சிகளும் இரட்டை
குழந்தைகள். உற்ற தோழர்கள். ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை பிரிப்பது
கஷ்டம். அதுபோலத்தான் எங்கள் கூட்டணியை பிரிக்க முடியாது. இந்த 2
கட்சிகளும் இணைந்து தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி
தந்திருக்கின்றன. பொருளாதாரத்தை தலைநிமிர செய்தது, மதச்சார்பற்ற ஆட்சி
நடத்தியது என பல்வேறு சாதனைகளை செய்து உள்ளது. வேறு யாரும் இதுபோல செயல்பட
முடியாது. தமிழகத்திலும் பல அரிய திட்டங்களை இந்த கூட்டணி கட்சிகள் செய்து
உள்ளன.
இவ்வாறு அவர் கூறினா டைல்ய்தந்தி.com
இதே மதுரையில் கடந்த 2-7-2005 அன்று
கருணாநிதி, சோனியா, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் ரூ.2 ஆயிரத்து
427 கோடி மதிப்பீட்டில் சேது சமுத்திர திட்டத்தை தொடங்கிவைத்தார்கள்.
ஆனால்
தமிழகத்தின் தற்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சேதுசமுத்திர
திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து
நிறுத்திவிட்டார்.
சந்திக்க முடிவதில்லை
இதுபோல
தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கிறார். வளர்ச்சியை
தடுக்கிறார். வேலைவாய்ப்புகளை தடுக்கிறார். இந்தியாவிலேயே அவர் மட்டுமே
சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி வருகிறார். கடந்த தி.மு.க.-காங்கிரஸ்
ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள், தொழிற்சாலை
வேலைவாய்ப்புகளை அம்மையார் ஜெயலலிதா சீர்குலைத்துவிட்டார்.
ஜெயலலிதாவை
பிரதமர், மத்திய மந்திரிகள் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. இங்குள்ள
அமைச்சர்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட யாரும் அவரை
சந்திக்க முடிவதே இல்லை.
கடந்த 5 ஆண்டுகளில்
தொழில் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. நோக்கியா உள்ளிட்ட
நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. மின் உற்பத்தி திட்டத்துக்கு அனுமதி
கிடைக்கவில்லை.
தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட தலைமை செயலகத்தை முடக்கினார். சென்னை, எண்ணூர் துறைமுக வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தவில்லை.
விவசாயிகள் தற்கொலை
5
ஆண்டுகளில் 2,400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். தொழில்
வளர்ச்சியில் 12-வது இடத்துக்கும், கல்வி வளர்ச்சியில் 13-வது
இடத்துக்கும், வேளாண்மை துறை வளர்ச்சியில் 21-வது இடத்துக்கும், ஒட்டுமொத்த
வளர்ச்சியில் 20-வது இடத்துக்கும் தமிழகம் தள்ளப்பட்டு உள்ளது. ஆனால்
ஊழலில் முதலாவது இடம் வகிக்கிறது. பால் விலையை ரூ.16 உயர்த்திவிட்டு,
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பால் விலையை குறைப்பேன் என்று கூறி
இருக்கிறார். இதுபோல பல்வேறு பொய்யான அறிவிப்புகள் மூலம் மக்களை ஏமாற்ற
ஜெயலலிதா நாடகம் போடுகிறார்.
இளைஞர்கள்
தமிழக
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு
ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். நலிவடைந்த சிறு, குறுந்தொழில்
மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரியில் ரப்பர் தொழிற்சாலை,
திண்டுக்கல், வேலூர், சென்னையில் தோல் பதனிடும் தொழிற்சாலை, கிருஷ்ணகிரி,
நத்தத்தில் மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் கொண்டு வரப்படும். இந்த
தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று கரப்சன், கலெக்சன், கமிஷன்
இல்லாத ஆட்சியை நடத்துவோம். போலீஸ் தலையீடு இருக்காது. கட்டப்பஞ்சாயத்து
நடக்காது. ரவுடிகள் தொல்லை ஒழிக்கப்படும்.
தமிழகத்தை தலைநிமிர செய்வது இளைஞர்கள் கையில் உள்ளது. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவையே ஒளிவிளக் காக மாற்ற இளைஞர்கள் பாடுபட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக