வெள்ளி, 13 மே, 2016

அழகிரி : இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் ...நீ எந்த தொகுதி.... ..சொல்றத செய்யுங்கம்மா’’

இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’’ ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அழகிரி மதுரை சத்ய சாய் நகரில் உள்ள தனக்கு சொந்தமான தயா மஹாலுக்கு மு.க.அழகிரி இன்று காலை 9.30 மணிக்கு வந்தார்.   இதையடுத்து, மதுரை தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய தொகுதி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இருந்து ஆதரவாளர்கள் 10.30 மணிக்கு திரண்டனர்.ஆதரவாளர்கள் ஆஜர் ஆனபிறகு கடைசியில் வருகை தருவதுதான் அழகிரியின் வழக்கம். இந்த முறை முதல் ஆளாக வந்து அமர்ந்துகொண்டார்.
ஒவ்வொருவரையும் பார்த்து, ’’நீ எந்த தொகுதி, நீ எந்த தொகுதி’’ என்று கேட்டுக்கொண்டார். பின்பு, எல்லோரையும் பார்த்து, ‘’நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.அப்போது ஒரு பெண்மணி, ‘’ஐயா, நீங்க வழக்கமாக திமுகவுக்குத்தானே ஓட்டு போடச் சொல்லுவீங்க’’ என்று தயங்கியபடியே கேட்டதும்,  ‘’நான் சொல்றத செய்யுங்கம்மா’’ என்று அழுத்தமாக கூறினார்.


அப்போது 3 டெம்போ வேன், ஒரு ஜீப்பில் போலீஸ் வந்து குவிந்தது.  தேர்தல் நேரத்தில் அனுமதி இல்லாமல் இப்படி கூட்டம் கூடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர்.  இதனால் அழகிரி ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ஆதரவா ளர்களை அமைதிப்படுத்தினார் அழகிரி இதையடுத்து, தன்னைப்பார்த்தவர்கள் அங்கேயே இருக்காமல் உடனுக்குடன் கிளம்பிச் செல்லும்படி அழகிரி உத்தரவிட்டார்.  சிறிது நேரத்தில் அழகிரியும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். நக்கீரன்,in

கருத்துகள் இல்லை: