Sri Lanka's Health Minister plans to cultivate cannabis for export.Health, nutritious and indigenous medicine minister Dr. Rajitha Senarathna said the government is ready to grow cannabis as an export crop. The minister said this addressing a function held at the water’s edge Battaramulla while introducing a new Ayurvedic medicine produced by the Ayurvedic Corporation.
இலங்கையில் பயிரிடப்படும் கஞ்சாவை மருந்து உற்பத்திக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டுவந்த ஆயுர்வேத மருத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுர்வேத மருந்து உற்பத்திக்காக கடந்த காலங்களில், அபினை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும், மருந்து உற்பத்திக்கு கஞ்சாவும் தேவைப்படுவதால் அதனை முறையாக இலங்கையில் உற்பத்தி செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக