தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக்கூட் டணி, தமாகா
இணைந்து போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணி தங்களுடைய கட்சி போட்டியிடும்
தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்துவதாக
குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் நேற்று
முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது
அவர், தேமுதிக போட்டியிடும் திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், ஆரணி
மற்றும் செய்யாறு ஆகிய 5 வேட்பாளர்களை மட்டுமே ஆதரித்து பிரச்சாரம்
செய்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் போளூர்
சட்டப்பேரவைத் தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் கீழ்பென்னாத்தூர்
சட்டப்பேரவைத் தொகுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் வந்தவாசி
சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் புறக் கணித்தார். அவரது
செயல், கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர்கள் கூறும் போது, “திருவண்ணாமலை மாவட் டத்தில் பிரேமலதா
விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்றதும், கூட்டணிக் கட்சிகளின்
தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், அவர் நிராகரித்துவிட்டார்” என்றார்.
இது குறித்து தேமுதிக நிர்வாகி ஒருவர் கூறும்போது, “கீழ்பென்னாத்தூரில்
போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
மாநிலச் செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் செய்தார்.
அதேபோல், தனது கட்சி போட்டியிடும் போளூர் தொகுதி யில் பிரச்சாரம் செய்த
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், கடமைக்காக ஆரணி
யில் மட்டும் பிரச்சாரம் செய்தார்.
போளூர், ஆரணி தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு கூட்டணி
ஒருங்கிணைப்பாளர் வைகோ நடையைக் கட்டினார். ஜி.கே.வாசன், திருமாவளவன்
ஆகியோர் பிரச்சாரத்துக்கு வர வில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலை யில் கூட்டணிக்
கட்சிகளை ஆதரித்து பிரேமலதா மட்டும் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறுவதை
ஏற்கமுடியாது” என்றனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார்
கூறும்போது, “பிரேமலதா விஜயகாந்த் மாலை 4 மணிக்கு தான் பிரச்சாரத்தை
தொடங்கினார். அதன் காரணமாக, அவரால் கூட்டணி கட்சிகள் போட்டி யிடும்
தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய முடியாமல் போய்விட்டது” என்றார். தினமலர்.கம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக