புதன், 11 மே, 2016

குஷ்பூ :இலவச மிக்சி கிரைண்டரில் 8 ஆயிரம் கோடி ஊழல் செய்த ஜெயலலிதா... பெரம்பலூரில் சிவகாமியை ஆதரித்து

பெரம்பலூர்: தமிழக மக்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கியதன் மூலம் அதிமுக அரசு ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது என்று தேர்தல் பிரசாரத்தில் குஷ்பு குற்றம் சாட்டி உள்ளார். திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரும், சமூக சமத்துவப்படை கட்சியின் தலைவருமான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமியை ஆதரித்து பெரம்பலூரில் குஷ்பு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை என்று கூறினார். தமிழகம் மதுவிற்பனையில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. டாஸ்மாக் மதுபானத்தை குடித்து பல லட்சம் குடும்பங்கள் சீரழிந்துவிட்டதாக கூறினார்
இலவச பொருட்களில் ஊழல் அ.தி.மு.க. ஆட்சியில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தருகிறோம் என்று கூறி ரூ.1,200 மதிப்புள்ள பொருட்களை இலவசமாக கொடுத்துவிட்டு அதன்மூலம் ரூ.8 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளனர். இதேபோல் ரூ.350 மதிப்புள்ள செல்போனை இலவசமாக தருகிறோம் என்று கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள்.
பணத்தின் மீது பாசம் ஜெயலலிதாவிற்கு மக்கள் மீது பாசம் இல்லை. பணத்தின் மீதுதான் பாசம் உள்ளது. தேர்தலையொட்டி அ.தி.மு.க.வினரிடம் இருந்து ரூ.100 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் ஊழல் பணம் தான்.
6வது முறை முதல்வர் முதல்வர் ஜெயலலிதா மக்கள் பிரச்னைகளை கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் பிரச்னை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண 93 வயதிலும் முயற்சி செய்பவர் கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாது. தேர்தலுக்கு பின்னர் 6வது முறையாக கருணாநிதி முதலமைச்சராக பதவியில் அமர்வார் என்றார்.
சிந்தித்து ஓட்டு போடுங்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆவின்பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.7 குறையும். மின்கட்டணத்தை மாதந்தோறும் கட்டலாம். மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதன்படி தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார் குஷ்பு.

Read more at: http://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: