சென்னை: சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்றும்,
ரசிகர்கள் தங்கள் விருப்பம் போல வாக்களித்துக்கொள்ளலாம் என்றும் அகில
இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
விஜய் நடித்து வெளியான தலைவா உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு தற்போதைய அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டு இடையூறுகள் செய்ததாக சர்ச்சை நிலவி வந்தது. எனவே, வரும் தேர்தலில், அதிமுகவுக்கு எதிராக செயல்படும்படி விஜய் ரசிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல்களை அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. அந்த இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நடுநிலை
அறிக்கையின் அம்சங்கள் பின்வருமாறு: வருகிற சட்டசபை தேர்தலில் இளைய தளபதி
விஜய் மக்கள் இயக்கம் நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்லது. அதாவது எந்த
கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை
அதே நேரம், விஜய் ரசிகர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி, தாங்கள்
விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். ஆனால், இளைய தளபதி விஜய் மக்கள்
இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது.
இந்த நிலைப்பாட்டை நான் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில்
அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும்
தெளிவுபட கூறியிருக்கிறேன்.
பொய் தகவல்
இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளேன். இந்த நிலையில் சில
ஊடகங்களில் விஜய் மக்கள் இயக்கம், ஒரு குறிப்பிட்ட, கட்சிக்கு ஆதரவு
அளித்தது போல செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான
செய்தி.
பெயர், கொடி கூடாது
எனவே, விஜய் ரசிகர்கள் குழப்பம் அடையாமல் தங்கள் விருப்பம்போல வருகிற
சட்டசபை தேர்தலில் தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என
தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றை மட்டும்
எக்காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது. இவ்வாறு புஸ்ஸி.என்.ஆனந்து
தெரிவித்துள்ளார்.
Read more at: //tamil.oneindia.com/
Read more at: //tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக