புதன், 9 டிசம்பர், 2020

சோனியா காந்தி... இந்தியாவின் மிகப்பெரும் அதிஷ்டம்! அன்னை சோனியா காந்தியின் 74 வது பிறந்த நாள்

இன்று அன்னை சோனியா காந்தியின் 74 வது பிறந்த நாள்! ( 9 திசம்பர் 1946)

ஆரிய பார்ப்பன பனியா கும்பல் முகலாயர்களின் பாதங்களை கழுவிக்கொண்டு தங்கள் ஜாதி கொடுமைகளை தொடர்ந்து அரங்கேற்றி கொண்டிருந்தார்கள் .  முகலாயர்களும் மதவாதிகள் என்பதால் பார்ப்பனர்கள் கூறிய பார்ப்பனீய கருத்துக்கள் ஒட்டுமொத்த சமூக கட்டுமானம் என்று கருதி அவர்களின் வலையில் வீழ்ந்து விட்டார்கள் . உண்மையான மண்ணின் மைந்தர்களின் துன்பங்களை கண்டுகொள்ள பெரிதும் தவறி விட்டார்கள்
ஆங்கிலேயர்கள் இந்த இடத்தில்தான் தனித்து நின்றார்கள் . போற்றுதலுக்கு உரிய பல புரட்சிகளை செய்ய தொடங்கினார்கள்..
ஆங்கிலேயர்கள்  காலனித்துவ இந்தியாவின்    ஜாதி மத மூட காட்டுமிராண்டி பழக்கங்களுக்கு எதிராக இருந்தார்கள்.

இவைக்கு எதிரான ஆங்கிலேயர்களின்  முன்னெடுப்புக்கள் ஆரிய பார்ப்பன பனியா கும்பலின் ஆத்திரத்தை கிளறி கொண்டே இருந்தது.
அவர்களின் ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பின் தொடர்ச்சிதான் நேரு குடும்பத்தின் மீதும் ஓரளவு இருந்தது .   சோனியா காந்தியின் அரசியல் வரவுக்கு பின் அது கண்மண் தெரியாத அளவு எகிறியது.


சோனியாவும் சுதந்திர  சிந்தனை கொண்டவர்.
இந்து இந்தி போன்ற மாய வலைக்குள் அவர் சிக்கவில்லை. பார்ப்பனர்களை ஓரளவு தூரத்தேதான் வைத்திருந்தார். 

சரத் பவார் போன்றவர்கள் எதிர்த்து அது முடியாமல் போகவே வெளியேறினார்கள் .

பிரதமர் பதவி நிச்சயம் என்று கருதி கொண்டிருந்த பிரணாப் முகர்ஜியை ஓரங்கட்டினார் . 

அவரால் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கினார் . அந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கீழே நிதி அமைச்சர் பதவியாவது கிடைக்கும் என்று நம்பியிருந்த அந்த ஆர் எஸ் எஸ் பிரணாப் முகர்ஜியை பாதி அலங்கார அமைச்சில குந்த வைத்தார் . இது போன்ற பல நிகழ்வுகள் சோனியாவின் வழிகாட்டலில் நடந்தன.
 

தமிழை செம்மொழி ஆக்கியதன் மூலம்  இந்தியா என்றால் சமஸ்கிருதம் என்ற கோட்பாட்டை தவிடு பொடியாக்கினார். அதோடு சேர்த்து சமஸ்கிருதமும் தேவை என்று கூறியபோது போனால் போகட்டும் என்று தலையசைத்து விட்டு கூடவே மலையாளம் தெலுங்கு கன்னடம் ஒடிஷா என்று ஏனைய திராவிட மொழிகளையும் செம்மொழி ஆக்கினார்
 

இன்னும் பலவற்றை கூறலாம் .இக்கட்டுரை திருமதி சோனியா காந்தி அவர்களுடைய வாழ்க்கை வரலாறு முழுவதையும் கொண்டதல்ல .
சங்கிகள் சோனியாவை வெறுக்கும் அல்லது அவரை கண்டு பயப்பிடும் நோக்கம்  பற்றிய ஒரு சிறு பார்வை மட்டுமே .
எந்த இந்திய பாரம்பரிய மூட நம்பிக்கைகளும் அற்ற ஒருவரால் மனித விழுமியங்களை அதிகமாக புரிந்து கொள்ள முடியும் என்று கருதுகிறேன்.
 

திருமதி சோனியா காந்தியின் வரவு இந்தியாவின் மிகப்பெரும் அதிஷ்டம் என்றுதான் கூறுவேன்/   .       

கருத்துகள் இல்லை: