dinamalar.com : பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(29), சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கென் தனி ரசிகர் வட்டம் உள்ளது. கடந்த ஆக., மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் திருமண தேதியை முடிவு செய்யவிருந்தார். இந்நிலையில், சென்னையை அடுத்த நாசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவு சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக