vikatan.com - துரைராஜ் குணசேகரன் : செட்டிநாடு குழுமங்களில் வருமானவரித் துறையினர் இன்று நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஏழு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.>தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், கணக்கில் வராத ஏழு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கரூர், அரியலூர், கோவை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். செட்டிநாடு குழுமம் வரிஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனையை வருமான வரித் துறையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகிறது. சோதனை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், கணக்கில் வராத ஏழு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது. அதோடு, சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனையானது நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் சோதனை முடிந்த பிறகுதான் விரிவான தகவல்கள் தெரியவரும்.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக