அப்போது ஒரே நபர்கள் பல திருமணங்களில் நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 5 வாலிபர்கள் மற்றும் 2 சிறுவர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள், பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அவர்கள் அனைவரும் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இந்த கும்பலில் உள்ள சிறுவர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கொடுத்து குத்தகைக்கு எடுக்கப்பட்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. குத்தகைக்கு எடுக்கப்பட்ட அவர்களுக்கு நூதன திருட்டுகள் பற்றி சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.
இந்த கும்பலில் இன்னும் பலபேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக