வியாழன், 10 டிசம்பர், 2020
சித்ராவின் உடலை பார்த்து கதறிய திரை உலகம்
நக்கீரன் : விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். இந்தநிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படிப்பிடிப்பு தொழிலாளர்கள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் சித்ரா உடலை பார்த்து கதறி அழுதனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக