தினத்தந்தி : ஜெயலலிதா குறித்த விமர்சனம்: எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு
திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரை அவதூறாக விமர்சித்ததாக, திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் ஆகியோரின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக