maalaimalar " சன்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் அவதூறாக பேசியதாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுவரை ஏன் கர்ணனை கைது செய்யவில்லை? என அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து சென்னை ஆவடியில் இருந்த முன்னாள் நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த கர்ணனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக