Maha Laxmi : · விவசாயிகள் மட்டுமின்றி, உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..
1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..??
2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..?
கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும்.
மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..??
விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..??
PDS system என்னாவது ..??
கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..??
ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில் ஒரு சட்டமா அல்லது திட்டமிட்ட சதியா ..??
10. ஒப்பந்தம் செய்த நிறுவனங்களால் மரபணு மாற்று விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டால் அதை தடுக்க ஏதாவது வழி உண்டா என்றால், இல்லை என்பதுதான் நிலை?
மேலும் பல கேள்விகள் எழுகின்றன..
சிலர் ஆதாயத்திற்காகவோ அல்லது ஒரு சார்பு நிலை எடுத்துவிட்டதாலோ உழவர்களை கிண்டலடிக்கலாம்..
ஒரு அரசு கடும் குளிரில் அமர்ந்து போராடும் லட்சக்கணக்கணக்கான உழவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஐந்து நாட்கள் குளிரில் அவதிப்படுங்கள், நாங்கள் எங்களுக்குள் வசதியாக அமர்ந்து பேசி மீண்டும் உங்களுடன் பேசுவோம் என்பது எந்த விதத்தில் நியாயம் என்பதனையும் எண்ணிப் பார்க்கவேண்டும்..
இந்த வலிகள் ஏதோ ஒரு சந்தர்பவசமாக பல மாநிலங்களில் ஆட்சியில் அமர்பவர்களுக்கோ புரியாது..
புரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள்..
ஆனால், உழவுக் குடும்பத்தில்
பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் இதன் பெரும் கேடு தெளிவாகப் புரியும்..
* உழவர்களின் நியாயமான போராட்டம் வெல்ல ஒவ்வொருவரும் துணை நிற்போம்!
1 கருத்து:
விவசாயிகள் நாசமாக பாேகவும் ..அதானி லாபத்தில் காெழிக்கவும் வழி செய்கிறார்களாே ..அத்தியாவசிய உணவுப் பாெருட்கள் லிஸ்டிலிருந்து நீக்கியது்ஏன் ..பதுக்கல் என்பதை புது முறையில் சேமிப்பு என்று கூறிவதுதான் நீதியா ..?
கருத்துரையிடுக