புதன், 9 டிசம்பர், 2020

ஈழக்கவிஞர்கள்/கலைஞர்கள் அறம்பாடுதலை கைவிட்டு பிஸ்னஸ்மேன்களாகி .. ஆனந்தவிகடன் மகா புழுகு

Image may contain: 1 person
வ.ஐ.ச. ஜெயபாலன்

ட்சத்திரன் செவ்விந்தியன் : வ.ஐ.ச. ஜெயபாலன் இளமையில். ஈழக்கவிஞர்கள்/கலைஞர்கள் அறம்பாடுதலை கைவிட்டு வெகுகாலம். பிஸ்னஸ்மேன்களாகி விட்டார்கள். 1✍சென்ற ஆண்டு வந்த ஆனந்தவிகடன் பேட்டியில் கவிஞர் தன் மூதாதையர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போராடியவர்கள் என்று மகா புழுகு செய்திருக்கிறார். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப்போராடியது உண்மை. ஆனால் ஈழத்தில் சிங்களவர்களோ தமிழர்களோ ஆங்கில காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடியதில்லை என்பது வரலாறு. காந்தி, நேரு போல விடுதலைப்போராட்ட தியாகிகள் யாரும் ஈழ வரலாற்றில் இல்லை. ஆங்கிலேயர் பக்கா சமர்த்தர்கள். ஈழத்து உள்ளூர் சட்டங்களை, மதங்களை மதித்து உள்ளூர் ஆதிக்கசாதிகளோடு இணங்கி ஆட்டையைப்போட்டார்கள். ஜெயபாலன் பொய்யைச் சொல்லும்போது பொருந்த சொல்லியிருக்கலாம்.

தன் முன்னோர் சைவமதவழிபாட்டை தடைசெய்த போர்த்துக்கேயரை தன் முன்னோர் எதிர்த்துப்போராடினார்கள் என்று அவர் சொல்லியிருந்தால் அது நிரூபிக்க கடினமான விடயம். ஆக முதல் கூற்றில் ஜெயபாலன் கிளீன் போல்ட்.

2✍விகடன் பக்கா வணிக பத்திரிகைதான். இருந்தும் தற்கால சமூக வலைத்தள தாக்கத்தால் கவிஞருக்கு இடம்கொடுத்து புலிகள் பற்றி பலவேறு விமர்சனங்கள் உண்டே என்று கேட்கிறது. அதற்கு விடையாக கவிஞர் மகா மட்டரகமான பதில் சொல்கிறார். பிரபாகரனை சங்ககால மன்னனான பாரியுடன் ஒப்பிட்டு பிரபாகரனுக்கு தங்கமுலாம் பூசுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன், நவீன சனநாயக ஆட்சி உலகவழக்காகமுதல் இருந்த பாரியை பிரபாகரனுடன் ஒப்பிடுவது பக்கா வியாபார தந்திரம். இங்கு நாம் விகடனுக்கே மார்கெட்டிங் கற்றுக்கொடுக்கிற கவிஞரை நாம் காண்கிறோம்.
3✍கவிஞர் தன்னுடைய 32 வயதில் இலங்கை சனநாயக சோசலிஷ குடியரசு முதிர் தமிழ் இளைஞர்களுக்காக விசேடமாக அனுமதித்த பல்கலைக்கழக அனுமதிக்கமைய இலங்கைப்பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத்தில்(காலேஜ்) சிறப்பு சலுகைகளின்படி இளங்கலைப்பட்டம் பெற அனுமதிக்கப்பட்டவர். பேட்டியில் தான் அனுமதிபெற்ற பத்து நாளில் நடந்த பல்கலைக்கழக மாணவர் தலைவர் போட்டியில் வென்று தலைவரானேன் என்கிறார். கவிஞர் போட்டியிட்டது தன்னைவிட பன்னிரண்டு வயது குறைவான
பசங்களுடன். கவிஞர் வாட்டசாட்டமான ரௌடியைப்போன்ற ஆறடி மனுசன். (படத்தைப்பாருங்கள்). இந்த 12 ஆண்டுகளில் கவிஞர் என்ன செய்தார் என்ற வரலாறு- Biography- Penguin/Random House போன்ற உலகப்பிரசித்தமான பதிப்பகம் விரும்பி பிரசுரிக்க கூடிய Best seller புத்தகமாகக்கூடியது. நவீன கால/பின்நவீன கால நியமங்களின்படி கவிஞர் ஒரு Ideal Protagonist. கவிஞர் தன் சகோதரி முறையான பெண்ணுடன் காதலுறவு கொண்டதால் கவிஞரின் தந்தை அவரை வீட்டை விட்டே கலைத்தார். கவிஞர் வன்னிப்பகுதியில் சிலரோடு சேர்ந்து செய்த கொலைக்காக இலங்கை சிறையிலிருந்து ஆதிக்கசாதி செல்வாக்கால் சிறை மீண்டதும் இக்காலத்தில்தான்.
4✍கவிஞரின் யாழ் பல்கலைக்கழ காலத்தில் அவர் ஒரு கைசாத்திர சோதிடராகினார். ஒரு பெண்ணின் கையை பிடித்தால் விடமாட்டார். சாத்திரம் சொல்லிட்டே இருப்பார். ஒரு தடியில் சேலையை சுற்றிவிட்டால் காணும். கவிஞர் சுற்றிட்டே இருப்பார் என்ற கவிஞரின் Reputation இக்காலத்தில் உருவானதுதான்.
5✍ கவிஞரின் பல்கலைக்கழக காலத்தில்தான் பல ஈழவிடுதலை இயக்கங்கள் உருவாகின..கவிஞரும் தன் சாதியைச்சேர்ந்த வெள்ளாள PLOTE இயக்க உறுப்பினரானார். புளட் இயக்க உட்படுகொலைகள் நடந்தபோது கவிஞர் தலமைக்கு தலையையும் கிளர்ச்சிக்காரர்களுக்கு வாலையும் காட்டி பிழைத்தார். கவிஞர் சலுகைக்கார Celebrity புளட்காரன். புலிகள் 1986 டிசம்பரில் புளட்டை
வேட்டையாடியபோது அவர் புது தில்லியிலும் சென்னையிலுமிருந்தார். பிறகு நோர்வேக்கு குடும்பத்தோடு போய் வடிவாக வசதியாக குடியேறினார்.
6✍ ஆடுகளம் படத்தில் வரும் பேட்டைக்காரன் பாத்திரம் கவிஞனின் நிஜ பாத்திரம்தான். கவிஞருங்கும் அவர் இளம் மனைவிக்கும் 21 வயது வித்தியாசம். கவிஞரின் முதல் மனைவி ஈழப்போராட்ட இயககயமொன்றான NLFT இயக்கத்தின் தலைவரான விஸ்வானந்ததேவனின் தங்கை. கவிஞரின் இயல்பு அறிந்து அப்பெண் கவிஞரை விலகியபோது கவிஞர் தன் முதல் மனைவியியை இலங்கை அரச உளவாளி என்று கதை கட்டினார். அசல் ஆடுகளம் பேட்டைக்காரனாக.
7✍ இவையெல்லாவற்றையும் விட ஜெயபாலனின் கவிதைகள் பல இன்றும் என் பிரியத்துக்குரியவை. கவிஞன் வேறு. அவன் கவிதைகள் வேறு. கவிஞருக்கும் என் காடு கவிதை ரொம்ப பிடிக்கும். என் இருபதுகளின் ஆரம்பத்தில் நோர்வேயிலிருந்து கொழும்பு திரும்பிய அவரோடு நெருங்கி பழகியிருக்கிறேன். அவர் வாழ்ந்த வெள்ளவத்தை அழகிய முள்முருக்கு பூக்கும் Fredrica தெருவையும் அவர் சகவாசத்தையும் பற்றி நான் கவிதை எழுதியிருக்கிறேன். கவிஞரில் எனக்கு கோபமில்லை. இதை நான் எழுதாவிட்டால் வேறு யாரும் எழுதமாட்டார்களே.
- நட்சத்திரன் செவ்விந்தியன்

கருத்துகள் இல்லை: