இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு வருகிறதா கொரோனா தடுப்பூசி? அனுமதி கேட்டது சீரம் இன்ஸ்டிடியூட்
Veerakumar -- tamil.oneindia.com :
டெல்லி: இந்தியாவில் கொரொனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம்
கோரியுள்ளது சீரம் இன்ஸ்டிடியூட்.
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை அவசர கால
பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
அவசர கால பயன்பாடு அனுமதி கேட்கும் முதல் இந்திய நிறுவனம் சீரம்
இன்ஸ்டிடியூட்தான் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அமெரிக்க மருந்து
நிறுவனமான ஃபைசர், அதன் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு
அங்கீகாரத்திற்காக மருந்து கட்டுப்பாட்டாளரான டி.சி.ஜி.ஐ (இந்திய
மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல்)யிடம் ஒப்புதல் கோரிய மறு தினமே சீரம்
இன்ஸ்ட்டிடியூட்டும் இதுபோன்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான
அஸ்ட்ரா ஜெனகா, இணைந்து, கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசி
தயாரித்துள்ளன.
புனே நிறுவனம் தயாரிப்பு
இந்த தடுப்பூசி பரிசோதனை மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவிலும்
இந்த தடுப்பூசி பரிசோதனைக்கு உட்பட்டு வருகிறது. பூனே நகரைச் சேர்ந்த சீரம்
இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா, பல மில்லியன் டோஸ்களை ஏற்கனவே உற்பத்தி செய்யத்
தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர்
அமைப்பிடம் சீரம் இன்ஸ்டியூட் இந்த மருந்தை இந்தியாவில் அவசரகால
பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்கும்படி கேட்டுக்
கொண்டு உள்ளது.
40 மில்லியன் டோஸ்
இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்காக அனுமதி
கேட்டு இருப்பது இதுதான் முதல் முறையாகும். ஐசிஎம்ஆர் வெளியிட்ட தகவல்படி,
சீரம் இன்ஸ்டியூட் ஏற்கனவே 40 மில்லியன் டோஸ்களை தயார் நிலையில்
வைத்துள்ளது. மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி கொடுத்ததும் மருத்துவ
துறை ஊழியர்களுக்கு இந்த மருந்துக்கு அவசர கால அடிப்படையில் வழங்கலாம்
என்று சீரம் திட்டமிட்டுள்ளது.
சென்னை தன்னார்வலர்
கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசி, நாட்டின் பல்வேறு
பகுதிகளிலும் ஐசிஎம்ஆர் மேற்பார்வையின் கீழ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு
வருகிறது. பிரேசில் மற்றும் பிரிட்டன் நாடுகளிலும் மூன்றாவது கட்ட
டிரையல்கள் நடைபெற்று வருகிறது. பரிசோதனையின்போது சென்னையை சேர்ந்த ஒரு
தன்னார்வலருக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் இது தடுப்பூசியின் காரணமாக இல்லை என்றும், இந்த தடுப்பூசி
பாதுகாப்பானது என்றும் பின்னர் அறிவிக்கப் பட்டது.
90 சதவீதம் பலன்
இந்த தடுப்பூசி 90% பலன் அளிக்கிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
இதுவரை நடத்தியுள்ள டிரையல்கள் மூலமாக தெரிய வந்துள்ளது என்று அறிவிப்பு
வெளியாகி உள்ளது. இந்த நிலையில்தான், அவசரகால பயன்பாட்டுக்கு தடுப்பூசிக்கு
அனுமதி கேட்டுள்ளது சீரம் இன்ஸ்டியூட். முதியோருக்கும் இந்த தடுப்பூசி
பலன் அளிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
கையாளுவது எளிது
கையாளுவது எளிது
இந்த தடுப்பூசியை 2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ், குளிர்பதன
பகுதியில் வைத்து பாதுகாத்துக் கொள்ள முடியும், ஆனால் ஃபைசர் நிறுவனத்தின்
தடுப்பூசி -70 டிகிரி செல்சியஸ் நிலையில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டியது
ஆகும். எனவே கோவிஷீல்டு தடுப்பூசி, இந்தியா போன்ற போதிய சேமிப்பு
கட்டமைப்பு வசதி இல்லாத நாடுகளுக்கு மிகவும் பலன் கொடுக்கக் கூடியது
என்கிறார்கள் சுகாதாரத் துறை வல்லுநர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக