``புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, தேர்தலில் ஓட்டுப்போடுவது என எனது பங்களிப்பு இருக்கும்...'' என்கிறார் மு.க.அழகிரி. தனது ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழகர் கோயில் பகுதிக்கு வந்த மு.க.அழகிரி, செய்தியாளர்களிடம் பேசினார். ``சட்டமன்றத் தேர்தலில் தங்களது பங்களிப்பு எப்படியிருக்கும்?'' என்ற கேள்விக்கு, ``சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, ஓட்டுப்போடுவதும் பங்களிப்புதான்" என்றவரிடம்,
`ரஜினி புதிய கட்சி தொடங்கவிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்றதற்கு ,``அவர் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தவுடன் வாழ்த்து தெரிவித்துவிட்டேன்’’ என்றார்.
`யாருக்கு வாக்களிப்பீர்கள்?’ என்ற கேள்விக்கு , ``அதைப் பற்றி சொல்ல முடியாது. ஆனால், வாக்களிப்பேன்" என்று அழகிரி பேசினார்.
மறுபக்கம், `அண்ணன் சீரியஸா பேசுறாரா, காமெடியா பேசுறாரா?’ என்று ஆதரவாளர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக