"கச்ச தீவு" காமராஜர் இந்திராவிடம் எதிர்வாதம் செய்தாரா? நெடுமாறனின் பங்கு என்ன?
Tha Mu :
கட்ச தீவு 1974 - யார் யார் என்ன செய்தார்கள்?
(கருணாநிதி, காமராஜர், நெடுமாறன், MGR , ஜெயலலிதா )
கட்ச தீவு 1974 ல் இந்திரா காந்தியால் திடீரென ஒரு நாள் இலங்கைக்கு விட்டு கொடுக்க பட்டது.
கையெழுத்திட்ட பிறகுதான் மீடியாவுக்கே தெரிய படுத்த பட்டது. இது இந்திரா காந்தியால் தன்னிச்சையாக எடுக்க பட்ட முடிவு. பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலையோ, மாநில அரசின் ஒப்புதலையோ பெறாமல் எடுக்க பட்ட முடிவு. கலைஞர் கருணாநிதி - இதை எதிர்த்து திமுக தமிழகம் முழுவதும் போராடியது. கலைஞர் கருணாநிதியினால் சட்ட பேரவையில் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இந்திரா காந்தியிடம் கடும் கண்டம் தெரிவிக்க பட்டது. அதன் விளைவாக சில திருத்தங்கள் செய்ய பட்டன.
1974 ல் காமராஜர் காங்கிரஸின் தேசிய தலைவர். இந்திரா காந்தியின் மிக நம்பிக்கையானவர். நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினர். அப்போதுதான் இந்திரா காந்தி காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார்.
காமராஜரும் இந்திரா காந்தியை எதிர்த்து கட்ச தீவுக்காக போராட வில்லை. இவரைத்தான் கர்ம வீரர் கூறி வருகிறோம்.
காங்கிரஸின் தேசிய தலைவர் காமராஜர் அன்று இந்திரா காந்தியை எதிர்த்து போராடியிருந்தால் பிரதமர் இந்திரா காந்தி நிச்சயம் தன் முடிவை மாற்றியிருப்பார்.
பழ .நெடுமாறன்
அப்போது தமிழக காங்கிரசின் தலைவர் மற்றும் பொது செயலாளராக இருந்தவர் பழ நெடுமாறன்(1970 -1979). இவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. இவரைத்தான் இன காவலர் என்று கூறி வருகிறோம்
MGR
அப்போது அதிமுக தலைவரான MGR ம் இந்திரா காந்தியை எதிர்க்க வில்லை. கருணாநிதி கொண்டு வந்த சட்டசபை தீர்மானத்தை ஆதரிக்க வில்லை. அவர் அப்போது மஞ்சுளா, லதா ஆகியோரோடு இனைந்து 'நேற்று இன்று நாளை' மற்றும் 'இதயக்கனி' படங்களில் மும்முரமாக நடித்து கொண்டிருந்தார். இவரைத்தான் புரட்ச்சி தலைவர் என்று சில தறுதலைகள் கூறி வருகின்றன.
ஜெயலலிதா
அப்போது ஜெயலலிதாவும் 'அவளுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் ஜெயஷங்கருடன் மும்முரமாக நடித்து வந்தார். இவரும் கட்ச தீவுக்கு குரல் கொடுக்க வில்லை. இவரைத்தான் தறுதலைகள் புரட்ச்சி தலைவி என்று கூறி வருகின்றன.
இதில் துரோகம் செய்தது காமராஜரே. அவருடன் சேர்ந்து துரோகம் செய்தது பழ நெடுமாறன்.
Vijay Ramalingam Murugesan
1974ல் காமராஜர் காங்கிரஸில் இல்லை. அப்போது காங்கிரஸ் கட்சி இந்திரா காங்கிரஸ் என்றும் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இரண்டாக உடைந்திருந்தது. காமராஜர் ஸ்தாபன காங்கிரஸில் இருந்தார். அவர் எப்படி இந்திராகாந்தியை தடுத்திருக்க முடியும். திமுகவும் இரண்டாக பிரிந்து அதிமுக உருவானது. ஆகையால் எம்ஜிஆர் எப்படி தடுத்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்.கருணாநிதி இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்திருந்தார். அவர் தான் இதை தடுத்திருக்க வேண்டும்....
Murugan Kuruswamy :
அந்த இருவரும் எதிர்ப்பையாவது தெரிவித்தார்களா, நாட்டிற்கு நல்லது என்று வரும்போது திமுகவுடன் உடன் பட்டு இந்திராவை கண்டிக்க வேண்டும் இல்லையா?
நடுவரசிற்கெதிராக திமுக செயலாற்றினாலும் சீனச்சண்டை வந்த போது நேரு அரசிற்காக உடன் பட்டு தம் கொள்கைகளை விட்டுக்கொடுத்து நாட்டின் ஒன்றுமையை காத்தார்ளா இல்லையா!
Murugan Kuruswamy :
நெடுமாறன் காங்கிரஸ் தலைவர்தானே !
காமராஜர் மத்திய உறுப்பினர்தானே எதிர்வாதம் செய்தார்களா இந்திராவிடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக