வெள்ளி, 11 டிசம்பர், 2020

நடிகை சித்ராவின் ஹோட்டலுக்கு வந்து போன அமைச்சர்? விடயத்தை மூடி மறைக்க முயற்சி?

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: நடிகை சித்ரா தற்கொலைக்கு யார் காரணம், என்ன காரணம் என்று 3 நாட்களாக விழிபிதுங்கி உள்ள நிலையில், சித்ராவின் கணவரும், சித்ராவின் அம்மா விஜயா இருவரும் தந்த மன அழுத்தமே காரணம் என்று போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர்.

 சித்ராவின் மரணம் நடந்து இன்றுடன் 3 நாட்களாகிறது.. சித்ராவுடையது கொலையா? தற்கொலையா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து வந்தது. சித்ரா கன்னத்தில் காயங்கள், தற்கொலைக்கான காரணம், திருமண சிக்கல்கள் இதையெல்லாம் வைத்து, பல்வேறு குழப்பங்கள், சந்தேகங்கள் நிலவி வந்தன. அனைத்துமே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரியவந்துவிடும் என்றும் நம்பப்பட்டது. இறுதியில், குடும்ப பிரச்சனை காரணமாகவே சித்ரா இந்த முடிவை எடுத்ததாகவும், இது கொலையல்ல, தற்கொலையே என்றும் முதல்கட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற அடுத்த கட்ட விசாரணையில் போலீசார் இறங்கினர்.  Image may contain: 3 people, text that says 'News18 Tamil Nadu 1d News18 Tamil Nadu 15m நடிகை சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் சிசிடிவி கேமராக்கள் வேலைசெய்யவில்லை- போலீசார் விசாரணையில் அதிர்ச்சி #CCTV #VjChitra See More சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் #MinisterJayakumar #vjchitra i f News18 Tamil Nadu நடிகை சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் சிசிடிவி கேமராக்கள் வேலைசெய்யவில்லை- போலீசார்... f News18 Tamil Nadu சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு அ...'

சாவடிச்சிட்டான் முன்னதாக, சித்ரா மரணத்துக்கு காரணம் என்னவென்று தெரிய வேண்டும் என்று அவரது அப்பா போலீசில் புகார் தந்திருந்தார்.. அதேபோல சித்ராவின் அம்மாவும், "மகளை சாவடிச்சிட்டான்" என்று ஹேமந்த் மீது குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கனவே, ஹேமந்த மீது சந்தேகங்கள் குவிந்து வந்த நிலையில், சித்ரா அம்மா சொன்ன குற்றச்சாட்டு மேலும் அதிர்ச்சியை கிளப்பியது.

கிடுக்கிப்பிடி இதனால், போலீசார் ஹேமந்திடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.. இன்று 3வது நாளாக கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.. ஹேமந்த், அப்போது பல தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளாராம்.. இதையடுத்து, சித்ரா தற்கொலைக்கு கணவர் ஹேமந்த் ரவி , தாயார் விஜயா என 2 தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே முக்கிய காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று ஹேமந்த் ரவி, சித்ராவிடம் பலமுறை சண்டை போட்டிருக்கிறாராம்.. கடந்த 2 நாட்ளாக சீரியல் நடிகர், நடிகைகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு, இது தெரியவந்துள்ளது... மேலும் ஹேமந்த் குடித்துவிட்டு அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார் என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

போன் அதேபோல, சித்ராவின் அம்மா விஜயா, ஹேமந்த்தை பிரிந்து வர சொல்லி தொடர்ந்து சித்ராவுக்கு போன் செய்து சொல்லி கொண்டே இருந்தாராம்... ஒரே ரூமில் ஹோட்டலில் இருவரும் தங்குவதுகூட விஜயாவுக்கு ஏற்கனவே பிடிக்கவில்லை என்று செய்திகள் கசிந்த நிலையில், சித்ராவின் அம்மா அதிக அளவு மன உளைச்சல் தந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


மெசேஜ்கள் இதனிடையே, சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், மெசேஜ்கள் அழிக்கப்பட்டுள்ளதாம்.. யார் இதை செய்தார்கள் என்று தெரியவில்லை.. எனவே, சைபர் கிரைமுக்கு சித்ராவின் செல்போன் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.. இந்நிலையில், 3-வது நாளாக, சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் இன்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: