கொரோனா குறையத் துவங்கியதால் சரத்குமார் வெப் சீரிஸ் படபிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்தார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதால் நேற்று சென்னை திரும்ப இருந்தார். இந்த நிலையில் சரத்குமாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹைதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு பாதிப்பு உறுதியானது. அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை, சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்து அடுத்தடுத்து தெரியப்படுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
சரத்குமார் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து தினந்தோறும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் கொரோனாவால் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. அடுத்த சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக