Karthikeyan Fastura ; ·
நவம்பர் மாதம் என்பதால் தங்கம் விலை கொஞ்சகாலம் சரிந்து கொண்டே வந்தது. பொதுவாக டிசம்பர் 15க்கு பிறகு மீண்டும் மேலே வரும். இம்முறை ஒருவாரத்திற்கு முன்பே மேலே வர ஆரம்பித்துவிட்டது.
இனி 2021 ஆகஸ்ட் மாதம் வரை மேலே ஏறிக்கொண்டே தான் இருக்கும். ஆகஸ்டில் சற்று சரிந்து மீண்டும் ஏற ஆரம்பிக்கும் பிறகு நவம்பரில் விழுந்து டிசம்பரில் ஏறும். தங்கத்தின் விலை 2004-05 வரை பெரிய ஏற்றம் காணாமல் சீராக சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் தங்கத்தை வாங்கி ரிசர்வ் பண்ண துவங்கினார்கள். அப்பவும் கூட ரிசர்வ் வங்கிகள் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப தங்கத்தை விற்கவும் வாங்கவும் தான் செய்தார்கள். 2010க்கு பிறகு தங்கத்தை விற்பதற்கு பதிலாக வாங்க மட்டுமே செய்தார்கள். அதாவது தங்கத்தின் வழித்தடம் ஒருவழிப்பாதையாக மாறியது. இதை முதலில் செய்தவர்கள் அமெரிக்கா. பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்ட அவர்கள் தங்கத்தை அதிகமாக வாங்கி ரிசர்வ் பண்ண ஆரம்பித்தார்கள். இதன் எதிரொலியாக ரஷ்யா, இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பியநாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்தன. தங்கத்தின் சர்வதேச மதிப்பு உயர ஆரம்பித்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு நடப்பு நிதியாண்டில் மட்டும் தங்கம் 65% ஏறி இப்போது 49% வளர்ச்சியில் இருக்கிறது. இன்று முதலீடு செய்வது நல்லது. ஏனென்றால் இனி இப்போதைக்கு விலை இறங்கபோவதில்லை. இத்தனைக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடுகள் Gold Reservesஐ குறைத்திருக்கின்றன
பொதுவாக எல்லா சந்தையிலும் ஒருசமயம் Bubble Burst நடப்பதுண்டு. அது தான் பொருளாதார விதி. தங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மற்ற சந்தைகளை விட தங்கத்தின் சந்தை அவ்வளவு எளிதாக உடைந்துவிடாது. அதற்கு இனி ஒரு உலகப்போர் நடக்கவேண்டும். மனிதனுக்கு அந்தளவிற்கு தங்கத்தின் மீது மோகம் அதிகம்.
இந்தியா Gold Reserveல் 9வது இடத்தை வகிக்கிறது. முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது. முதலிடத்திற்கும் அதற்கு அடுத்த இடத்திற்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. அந்தளவிற்கு தங்கத்தை அமெரிக்கா ரிசர்வ் செய்கிறது.
ஆகவே தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பயப்பட தேவையே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக