Kandasamy Mariyappan : · .மூதறிஞர் ராஜாஜி என்ற திரு.ராஜகோபால் அவர்களின் பிறந்த தினமாம் இன்று.
திரு.ராஜாகோபால் அவர்கள் சிலகாலம் சென்னை மாகாண முதல்வராகவும், இந்திய ஒன்றியத்தின் கவர்னர் ஜெனரலாகவும் இருந்த பொழுது ஹிந்தியை தமிழ்நாட்டில் திணித்தார்.
பின்பு முதலமைச்சராக இருந்த பொழுது குலக்கல்வி திட்டத்தை தமிழ்நாட்டில் திணித்து, நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கிய ஏறத்தாழ 6000 பள்ளிகளை இழுத்து மூடினார்...
திருப்பதி, சித்தூர், குடகு, பாலக்காடு, மூணாறு, தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளை திரு. காமராஜருடன் இணைந்து பக்கத்து மாநிலங்களுக்கு தாரைவார்த்தார்.
மேலும், தனது தேசப்பணியைப் பாராட்டி சென்னையில் இருக்கும் கவர்னர் மாளிகையை தன் பெயரில் அரசாங்கம் எழுதித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்! அவரின் அந்த பேராசை நிறைவேறவில்லை.
அவரை நினைவுகூற அவரால் பயனடைந்த அவரது இனத்திவர்கள் இல்லை என்றாலும்......!!! நாம் அவரது பிறந்தநாளை நினைவு கூர்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக