Mrs. Doubtfire படத்தில் நடித்த ராபின் வில்லியம்ஸ் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார் .ஒரு மிகப்பெரிய ஹாலிவூட் நடிகர் இப்படி ஒரு முடிவை எடுத்தது மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவமாகும் இதுபற்றி தமிழக பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் எல்லாம் ஒரு பாட்டம் அழுது சீன் காட்டியது .
இதில் பல ஊடகங்கள் ராபின் வில்லியம்ஸின் இறப்பு பற்றிய இரங்கல் செய்திகளையும் அவர் பற்றிய மேலதிக விபரங்களையும் கமல ஹாசனிடம் மிகுந்த பக்தி சிரத்தையோடு கேட்டு ரசிக மகா ஜனங்களுக்கு தெரியப்படுத்தின .
Mrs. Doubtfire படத்தில் ராபின் வில்லியம்ஸ் நடித்த ரோலில் கமல ஹாசனும் அவ்வை சண்முகம் படத்தில் நடித்து தூள் கிளப்பினார் என்று பெருமையாக புராஜெக்ட் பண்ணினார்கள் . கமலஹாசனும் அதற்கு ஏற்றாற்போல் நல்மொழிகள் பல கூறி இரங்கல் தெரிவித்தார்
இது எவ்வளவு பெரிய மோசடி ? ஒருவன் ஒரு வீட்டில் திருடி விட்டான் . சில நாட்களின் பின்பு அந்த திருட்டு போன வீட்டின் உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார் . அதன் பின்பு அந்த வீட்டில் திருடியவரிடமே போய் அந்த வீட்டுக்காரர் பற்றிய இரங்கலையும் அனுபவங்களையும் கேட்டு சோகத்தை கொண்டாடும் ஊடகங்கள் எவ்வளவு கேவலமானவை கோமாளித்தனமானவை?
அதே போன்ற ஒரு திருட்டைதான் கமலஹாசன் வழமை போல செய்துள்ளார் . கமலஹாசன் போன்றோர் என்ன செய்தாலும் அதற்கு விளம்பரம் கொடுக்கவேண்டும் என்ற முடிவோடு செயல்படும் ஊடகங்கள்தான் தமிழர்களின் மிகப்பெரிய அழிவு சக்திகள்
ஒருவேளை கமலஹாசன் போன்ற கதை திருடர்களால்தான் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டாரோ கூட தெரியாது . இருக்கலாம் . தன்படத்தை ஒரு திருடி படம் எடுத்து அதை பற்றிய குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் உலகத்தில் பெரிய தர்ம வீரன் போன்று நாடகம் ஆடும் கமல் போன்றவர்கள் நிறைந்தது இந்த உலகம் என்றுதான் ராபின் வில்லியம்ஸ் கருத்தினரோ தெரியவில்லை. ராபின் வில்லியம்ஸின் இறப்புக்குக் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் அவரது Mrs. Doubtfire மட்டுமல்லாது what dreams may come போன்ற படங்களையும் பார்த்துள்ளேன் மிக சிறந்த படங்கள் . மிக சிறந்த கலைஞன் ராபின் வில்லியம்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக