tamil.filmibeat.com - Mari S : சென்னை: விஜே சித்ராவின் உடலை பார்த்த நடிகர் ஆசீம், இதை தற்கொலைன்னு சொன்னா நம்பமாட்டேன், வேற ஏதோ நிச்சயம் நடந்திருக்கு என கொந்தளித்த வீடியோ வைரலாகி வருகிறது. சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த சின்னத்திரை நடிகர்களையும் அதிரவைத்துள்ளது.
சித்ராவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் ஆசீம் கொந்தளித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. விஜய் டிவி பிரபலம் விஜய் டிவி பிரபலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் கனவு சீரியல் நடிகர் ஆசீம், விஜே சித்ராவின் நல்ல நண்பர். சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட தகவலை கேட்டு ரொம்பவே ஷாக்கான அவர், விஜே சித்ராவின் இறுதிச்சடங்கிலும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். தற்கொலைக்கு எதிரானவள் தற்கொலைக்கு எதிரானவள் தற்கொலை எண்ணத்திற்கு ரொம்பவே எதிரானவள் சித்ரா என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. அவரது முகத்தில் எப்படி கீறல் ஏற்பட்டது. சித்ராவின் மரணத்தில் நிச்சயம் மர்மம் இருக்கிறது என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
எம்.எஸ்.சி சைக்காலஜி படிச்சவ சித்ரா, அவ எப்படிங்க சூசைட் பண்ணிப்பா.. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பண்ணி இறந்தப்ப கூட, தற்கொலை தீர்வல்ல என பதிவு போட்டவ, காலையில மதுரையில ஒரு ஷூட் பண்ணா, ஈவ்னிங் சென்னையில ஷூட் பண்ற அளவுக்கு ஒரு பிசியான பொண்ணு.. வேலை இல்லாமல் இருந்தா கூட ஏதாவது ஒத்துக்கலாம் என ரொம்பவே ஆதங்கப்பட்டார் ஆசீம்.
சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என பிரேத பரிசோதனை அறிக்கை கொடுத்துருக்காங்க, ஆனால், இதுல வேற ஏதோ நடத்திருக்கு, அவ நிச்சயம் அப்படி செய்திருக்க மாட்டா, வாய்ப்பில்லாமல் 6, 7 மாசம் வீட்டில் இருந்தால் கூட அப்படி சொல்லலாம். தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் இரவு வரை ஷூட்டிங்கில் இருந்தவர் எப்படி அப்படி செய்து கொள்ள முடியும் என்றும் ஆசீம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சின்னத்திரை நடிகர் ஆசீம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு
என்ட்ரியாக வரவுள்ளார் என்றும் அவர் குவாரண்டைனில் உள்ளார் என்றும்
ஏகப்பட்ட தகவல்கள் பரவின. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆசீம் வரப் போவது
இல்லை என்பது இன்னமும் அவர் வெளியே இருப்பதை வைத்து உறுதி செய்ய முடிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக