செவ்வாய், 19 மே, 2020

டொனால்டு டிரம்ப் : ஒரு வாரத்திற்கும் மேலாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை எடுத்து வருகிறேன்-

தினத்தந்தி :கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை எடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி மற்ற நாடுகளுக்கு பரவி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னணியில் உள்ளது.
கொரோனா வைரஸ் சிகிச்சையில் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதல்ல என்று தனது சொந்த அரசின் வல்லுநர்கள் கூறும் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை தான் சாப்பிட்டு வருவதாக என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார்,


சில மருத்துவர்கள் இது கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக வேலை செய்யும் என்று நினைத்தாலும், அமெரிக்க அரசாங்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் இது பாதுகாப்பாக இருப்பதாக நிருபிக்கப்படவில்லை என்று எச்சரிக்கின்றனர். இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப் வைரஸுக்கு எதிர்மறையையாக பரிசோதனை செய்து உள்ளேன்.எனக்கு அறிகுறிகளைக் காட்டவில்லை

சுமார் ஒன்றரை வாரங்களாக ஒரு தடுப்பு நடவடிக்கையாக இந்த மருந்தை உட்கொண்டுவருகிறேன். நான் ஒவ்வொரு நாளும் ஒரு மாத்திரை எடுத்துக்கொள்கிறேன் என கூறினார். ஏன் என்று கேட்டதற்கு ஏனென்றால் இது நல்லது என்று நான் நினைக்கிறேன், நான் நிறைய நல்ல கதைகளைக் கேட்டிருக்கிறேன்." ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எத்தனை பேர் எடுத்துக்கொள்கிறார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், குறிப்பாக முன் வரிசை ஊழியர்கள் பலர் அதை எடுத்துக்கொள்கிறார்கள், நான் அதை எடுத்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: