Velmurugan P tamil.oneindia.com/ :
டெல்லி: தனியார் விமான நிறுவனங்கள் மே 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள்
ஆரம்பிக்க உள்ளதாக முன்பதிவை திறந்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு தழுவிய லாக்டவுன் மே 31 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள்
விமான சேவைகள் மே 31 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக விமான
ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை மாலை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்
ஹர்தீப் பூரி, "உள்நாட்டு விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து
முடிவெடுப்பது விமான போக்குவரத்து துறை அமைச்சகமோ அல்லது மத்திய அரசு
மட்டும் அல்ல. கூட்டுறவு கூட்டாட்சிவாதத்தின் உணர்வில், இந்த விமானங்கள்
புறப்படும் மற்றும் சேரும் மாநில அரசுகளின் கையில் உள்ளது.
மாநில அரசுகள்
தான் சிவில் விமான நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும்" என்றார்.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் விமான நிறுவனங்களின் வணிக நடவடிக்கை
இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் விமான போக்குவரத்து மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஜுன் முதல் மீண்டும் விமான போக்குவரத்தை
தொடங்க விமான நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.
இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஏர் மற்றும் ஏர் ஏசியா ஆகியவை உள்நாட்டு
விமானங்களுக்கான முன்பதிவுகளை ஆரம்பிக்க தொடங்கி உள்ளன. ஜுன் மாதத்தில்
முதல் இரண்டு-மூன்று நாட்களுக்கு விமானக் கட்டணங்கள் கிட்டத்தட்ட ரூ .1000
அதிகமாக இருக்கிறது. எனினும் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்யத் தயாராக
இருப்பது வலைதள பக்கங்களை பார்த்தால் தெரிகிறது..
எஸ்எஸ்எல்சி தேர்வு பயமா? பதற்றம் நீங்க மந்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக