
புளுகப்பட்டிருக்கலாம் என்பதற்கு_ நம் மண்ணில் நடந்த ஒரு நடைமுறைச் சான்று ! 1990-ல் EPRLF பத்மநாபா அவர்கள் கோடம்பாக்கம் ,ஜக்கிரியா காலனி,இரண்டாவது தெருவில் இருந்த கமலா பிளாட்ஸ் என்னும் அடுக்குமாடிக் குடியிருப்பில் தரை தளத்தில் புலிகளால் பாதிப்புக்குள்ளான போராளிகளோடு தங்கியிருந்தார்..அவருடைய அறை தனியானதுதான்..அவர் அந்த இடத்தில் தங்கி இருந்ததற்கு முக்கிய காரணம்...
அருகிலிருந்த அவரோட மாமனார்வீடு ,
அதாவது மனைவியின் வீடு 0.3கிமீ தொலைவில் இருந்த குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருந்தது..அங்குதான் மனைவி இருந்தார்...இவரும் வந்தால் எளிதாக அவர்களை சந்தித்துக் கொள்ள விரும்பியே அந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமென செய்தியறிந்திருக்கிறேன்.
அப்போது எங்களது கல்வி நிறுவனம் அங்கேயே இருந்த மேல் மாடியிலும்..
எங்களது விடுதி முதல் மற்றும் இரண்டாம் தளத்திலும் இயங்கி வந்தது..
அவர் அங்கு சாதரணமாக ஆட்டோவில்தான் வருவார்.போவார்..
கடைகளுக்கெல்லாம் சுதந்திரமாக போய் வரக்கூடியவர் என்பதை நாங்கள் பாத்திருக்கிறோம்.குடியிருப்பில் உள்ள திறந்த வெளியில் நின்று சிகரெட் எல்லாம் கூடப் புகைப்பார்..
அப்போது கலைஞரின் ஆட்சி..
அக்காலத்தில் அனைத்துக் குழுக்களுமே இங்கு வந்து தங்கி..ஓய்வு மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்வதாக ஒரு செய்தி உண்டு.அதேநேரத்தில் சாலிகிராமத்தில்தான் புலிகளின் ஆட்கள் தங்குவதாகவும் செய்திகளிருந்தது..கோடம்பாக்கம் ஜக்கிரியா காலனிக்கும் ,
சாலிகிராமத்திற்கும் உள்ள
தொலைவு வெறும் 6 கி.மீட்டர்கள்தான்..
இந்த இடத்தில் பத்மநாபா புலிகளுக்கு பயந்துதான் இங்கு பதுங்கினார் என்ற வாதம் எடுபடாதுதானே...நிற்க.
இங்குதான் சின்ன சாந்தன் நாங்கள் பயிலும் அதே நிறுவனத்தில் படிப்பதாக வந்து சேருகிறான்..விடுதியில் தங்குகிறான்.. பத்மநாபா ஆட்களிடம் ஈழத்திலிருந்து படிக்க வந்தது போல பம்மி அனுதாபங்களைப் பெறுகிறான்..
அவர்களும் அவனுக்கு உணவு இடுகின்றனர்.பத்மநாபாவிடம் அறிமுகப்படுத்தி பண உதவியும் செய்கின்றனர்..இவன் அடிக்கடி சொந்தங்கள் இருப்பதாகக் கூறி, சாலிகிராமம் சென்று வருவான்.
அப்போது கொலைக்கு சில தினங்களுக்கு முன்னர்.. பத்மநாபாவின் அறை மட்டும் அருகிலிருந்த பவர் பிளாட்ஸ்ஸிற்கு மாற்றப்படுகிறது..
எங்களுக்குத் தேர்வு 1990,ஜுன் -7ல் முடிவடைகிறது..நாங்கள் சொந்த ஊர் சென்றுவிட்டோம்..இரல்வே பார்டர் சாலையிலிருந்த பவர் குடியிருப்பில்
ஜுன்-19 காலையில் அவருடன் இருந்த இயக்கத் தோழர்களுடன் அவர் படுகொலை செய்யப்படுகிறார்..நாங்கள் விடுமுறை முடிந்து வந்தபோது எங்களுடன் படிப்பதாக வந்து தங்கியிருந்த சின்ன சாந்தன் மிஸ்ஸிங்.
இந்தக்கொலையை நியாயப்படுத்த இதற்குப் பிறகு எழுதப்பட்ட நூலில்
"#பத்மநாபாவைக்_புலிகள்_கொல்லாமல்_விட்டிருந்தால்_அவர்_பிரபாகரனைபோட்டுத்_தள்ளியிருப்பார்"
என்று புளுகியிருக்கின்றனர் புலிகளின் புரவலர்கள்..
இந்த இடத்தில்தான் இரு ஐயங்கள்
🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄🙄
1.பத்மநாபா நடவடிக்கைகளில் அவர் அஞ்சி இங்கு பதுங்கி இருந்ததற்கான எந்த அறிகுறியுமே இல்லை என்பது சாதரணமானவன் கூடப்புரிந்து கொள்ள முடியும்..இச்சூழலில் அவர் தனக்கு இப்படி ஒரு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தவராக இல்லை என்பதே உண்மையாக இருக்க முடியும்.
தமிழகத்தில் கலைஞர் ஆட்சியிலிருக்கிறார்..அவர் அனைவரையும் அரவணைக்கிறார்..
ஆதலால் இங்கு அப்படியொரு துன்பியல்வு நடக்காது என நம்பினாரா?
2.புலிகளின் தலைவர் பிரபாகரன் தளபதிகளை மட்டுமே சந்திக்கும் வழக்கம் கொண்டவர்..அவரை நெருங்குவதற்கு முன் எத்தனை பாதுகாப்பு வளையங்களைக் கடக்க வேண்டும்..அது அவ்வளவு எளிதல்ல என்பதை அனைவருமே அறிவர்..
உண்மை இவ்வாறிருக்க ..மேற்கண்ட புளுகல் செய்தியை நம் மக்களிடம் நிறுவியிருக்கின்றனரே...😪😪😪😪
இங்கே நடந்த,நாமெல்லாம் கண்ணில் கண்ட நிகழ்வே இப்படி திரிக்கப்பட்டு இருந்தால்..
புலிகளின் புரவலர்கள்...நாமும் கண்டிராத ஈழத்தைப் பத்தி என்னவெல்லாம் திரித்து எழுதி நம்முள் ஏற்றியிருப்பரென புரிந்து கொள்ளுங்கள்..
ஆதலால்தான் புலிகளின் நடவடிக்கைகளில் அம்மா அருள்மொழி கூறியது போல் மீளாய்வு அவசியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக