.hindutamil.in : புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா வதேராவின் பேருந்து உதவிகளை யோகி ஆதித்யநாத்
அரசு ஏற்றுக் கொண்டு அனுமதிக்க வேண்டுமென்று கையெடுத்துக் கும்பிட்டு
கேட்டுக் கொள்கிறோம் என்று காங்கிரஸ் செய்தித் தொர்பாளர் அபிஷேக் சிங்வி
கேட்டுக் கொண்டுள்ளார்.
தொழிலாளர்கள் உணவு, குடிநீரின்றி சாலைகளில் நடந்து வருகின்றனர், இந்தச் சமயத்தில் வெட்கங்கெட்டத் தனமாக அரசியல் செய்கிறது உ.பி. அரசு என்று சிங்வி சாடினார்
இது தொடர்பாக அபிஷேக் சிங்வி செய்தியாளர்களை தொலைமாநாட்டில் சந்தித்து பேசிய போது, “கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். ஆதித்யநாத் அரசு அவர்களுக்கு உதவ முடியவில்லை எனில் பிரியங்காஜி உதவிக்கு அனுமதிக்க வேண்டும்
இன்னும் காலம் கடந்து விடவில்லை, மீண்டும் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன், பிரியங்கா காந்தி கூறுவது போல் உங்கள் பெயரயோ, கட்சியின் பேனரையோ பஸ்களில் வைத்துக் கொள்ளுங்கள், குறைந்தது நாங்கல் அளிக்கும் உதவியையாவது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நான் இந்தச் செய்கையைக் கண்டிக்கிறேன், தேசம் இதைக் கண்டிக்கிறது. இது வெட்கங்கெட்ட அரசியல், நெருக்கடியிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் கஷ்டத்தில் செய்யப்படும் அரசியலாகும் இது.
அவர்களும் ஒன்றும் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.
இந்தத் தேசத்துக்கு அவர்கள் பதிலளிப்பார்களா? கடந்த 2 நாட்களாக சுமார் 500 பஸ்கள் உ.பி எல்லைகளில் நின்று கொண்டிருக்கிறது. பிஹார் , உ.பி புலம் பெயர் தொழிலாளர்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? மிகவும் மலினமான அரசியலாகும் இது.
ஆதித்யநாத் கூட்டுறவு கூட்டாட்சி பற்றியெல்லாம் லெக்சர் அடிக்கிறார் ஆனால் இத்தகைய மலிவான அரசியலைச் செய்கிறார்” இவ்வாறு கூறியுள்ளார் அபிஷேக் சிங்வி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக