hindutamil.in :தூத்துக்குடியில்
இருந்து இந்த வாரத்தில் 3 ரயில் மூலம் பஞ்சாப், உத்தரப் பிதேசம் மற்றும்
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்து மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று சமூகப் பரவல் ஏற்படவில்லை. முதலில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள், தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள், தற்போது மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வருவோருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தான் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்துக்கு தினமும் வெளி மாநிலங்களில் இருந்து 120 முதல் 150
பேர் வருகின்றனர். மே மாதம் 4-ம் தேதிக்கு பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில்
இருந்து 1000 பேர், கர்நாடகாவில் இருந்து 176 பேர், குஜராத்தில் இருந்து 75
பேர் உள்பட வெளி மாநிலங்களில் இருந்து இதுவரை 1,494 பேர் வந்துள்ளனர்.
மாவட்டத்தின் பிரதான சாலைகளில் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணிகக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தங்க வைத்து பரிசோதனை செய்ய 9 இடங்களில் தனிமைப்படுத்துதல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நமது மாவட்டத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த 8,700 தொழிலாளர்கல் பணியாற்றி வருகின்றனர். இதுவரை 1,919 பேர் உத்திரபிதேசம், பிஹார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வாரத்தில் 3 ரயில் மூலம் பஞ்சாப், உத்தரப் பிதேசம் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக