ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

தமிழன் டிவி 23 ஆண்டுகள் - ஒரு தலைமுறையின் நினைவுகளும், ஆரம்ப கனவுகளும் சேர்ந்த கால அளவு..!

May be an image of one or more people and text that says "pcAaR CET தமிழன் ன் 24 ஆம் அ ஆண்டில் ண்"

 Hemavandana  :   தமிழன் டிவி 24ம் ஆண்டில் நுழைகிறது..!
23 ஆண்டுகள் என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல.. அது ஒரு தலைமுறையின் நினைவுகளும், பலரின் ஆரம்ப கனவுகளும் சேர்ந்த கால அளவு..!
​ஊடகத் துறையில் ஒரு நிறுவனம் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமானதல்ல...!
​இந்த நெடிய பயணத்தின் தொடக்கப் புள்ளியில், 24 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை, மறைந்த தோழர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்கள் முதன்மையானவராக இருந்து இதனைத் தோற்றுவித்தார் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும்..!
ஆரம்ப காலத்தில் தோழர் திருமாவளவன் போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் வருகையும், உரையாடல்களும் இந்த மேடைக்கு ஒரு கருத்தியல் பரிமாணத்தை உருவாக்கி, அதன் அடித்தளத்தை வலுப்படுத்தியதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டி உள்ளது..!!


இந்த சேனலில் நான் பணி புரிந்ததில்லை.. ஆனால் இங்கிருந்து உச்சத்துக்கு சென்ற சிலர், தங்களுக்கு விலாசம் தந்ததை ஏனோ நினைவு கூர்வதில்லை..!!
ஊடகவியலாளர்களின் வாழ்வியலோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான அடையாளமாக இந்த சேனல் திகழ்கிறது..!
​தமிழன் டிவி பற்றி பேசும்போது, வெறும் ஊடக வரலாறு பேசப்படவில்லை.. பல மனிதர்களின் ஆரம்ப அத்தியாயம் பேசப்படுகிறது.. இன்று திரையில் தோன்றும் பல முகங்கள், ஒருகாலத்தில் தங்கள் முதல் ஒளியை கண்டது இந்த மேடையில்தான்..!
​கேமரா முன் நிற்கும் தைரியம் முதல், செய்தி சொல்லும் பொறுப்பு வரை கற்றுக் கொண்ட இடம் இதுதான்..!
இன்று பெரிய சேனல்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல மூத்த பத்திரிகையாளர்கள், ஒருகாலத்தில் தங்களின் முதல் அடியை வைத்தது தமிழன் டிவியில்தான்..!
​இந்த சேனல், வேலை மட்டும் தரவில்லை.. பணியின் பொறுப்பை கற்றுத்தந்தது.. ஒழுக்கத்தையும், ஊடக நெறிமுறையையும், விதைத்தது..!!
 உண்மையில் இது ஒரு சேனல் அல்ல.. குருகுலம் போல செயல்பட்ட ஒரு பயிற்சி மையம்..! 
​ஒரு சிந்தனையின் நிலைத்தன்மை.. ஒரு நம்பிக்கையின் தொடர்ச்சி..! 
அதனால் தான் தமிழன் டிவி கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்களும் பலரின் ஆரம்ப கால கனவுகளை இன்றும் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றன..!
​தொழில்நுட்ப மாற்றங்களும், கால மாற்றங்களும் ஊடகத்துறையை உருமாற்றினாலும், தமிழன் தொலைக்காட்சி தனது அடிப்படை விழுமியங்களிலிருந்து சற்றும் விலகாமல் பயணிப்பது அதன் நேர்மைக்குச் சான்று..!!
ஊடகப் பயணத்தில் எங்கோ நிழலாகி போனவர்களுக்கு, மீண்டும் ஒளி பார்க்க ஒரு முகவரியை இன்றும் தந்து கொண்டிருக்கிறது..!
​“தமிழன் கலைக்கூடம்” என்ற அந்த ஆலமரத்தில் எத்தனை எத்தனையோ நட்சத்திரப் பறவைகள் அமர்ந்து பறந்திருக்கின்றன.. இன்னும் பல பறவைகள் பறக்க காத்திருக்கின்றன..!!
​இது வெறும் ஒளிபரப்பு நிலையம் அல்ல.. பல கனவுகளின் தாய் மண்..!
அந்த தொடக்க காலத்தின் வேர் இன்றும் ஈரத்தோடு இருப்பதே இந்த நிறுவனத்தின் ஆகச்சிறந்த பலம்..!!
"கவர்ச்சி மாயை" வட்டத்தில் அடிபடாமல், நிலைத்த சிந்தனையுடனும் சமூகமும் தமிழையும் முன்னுரிமையாகக் கொண்டு பயணத்தை தொடர்கிறது
இன்னும் பல ஆண்டுகள் தமிழன் டிவி நிலைத்து நிற்க வேண்டும்.. வளர வேண்டும்.. மேலும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்..!
அசைக்க முடியாத உழைப்பால் இந்நிறுவனத்தை நிறுவி, வளர்த்தெடுத்து வரும் எங்கள் குடும்ப நண்பரான கலைக்கோட்டுதயம் கா  அவர்களுக்கு அடர்த்தியான வாழ்த்துக்கள்..!
உங்களுக்கு என் அன்பான வணக்கங்களும் தோழர் 💜
- ​ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்
Hemavandana

கருத்துகள் இல்லை: