RS_பாரதி :
நேற்று மாலை OPS மீது 200 கோடி ஊழல் செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டேன், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் பல கோடி முறைகேடு, ரூ.4,000க்கு வாங்கிய வெண்டிலேட்டருக்கு 16,000 ரூபாய்க்கு பில் செய்துள்ளனர், தற்போது இது தொடர்பாக ஆவணங்கள் தயார் செய்து கொண்டுள்ளேன், இன்று ஆதாரங்களுடன் புகார் அளிக்கவுள்ளதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்டு கைது நடவடிக்கை எடுத்துள்ளனர், சீப்பை ஒழித்து வைத்தால் திருமணம் நின்று விடாது.
R.S.பாரதி, எம்.பி, நிதானமாக பேட்டி.
தினத்தந்தி :சென்னை,
திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்
பாரதியை இன்று காலை போலீசார் திடீரென கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள
ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்ததால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில்
அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆர்.எஸ்
பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது.
ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் சுந்தரம்
என்பவர் ஆர்.எஸ் பாரதி மீது புகார் அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக ஆர்.எஸ் பாரதியை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர்.
தினகரன் : சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாய் லட்சுமிகாந்த் ( மகன் ) :; அப்பாவிடம் தொலைபேசியில் பேசினேன். நான் முன்ன கைதானப்போ நீங்க சின்ன பசங்களா இருந்தீங்க.. விவரம் தெரியாது.. இப்ப வளர்ந்துட்டீங்க.. அதான் ஒரே வித்தியாசம்னு சிரிச்சிக்கிட்டே சொன்னார்.
வயது 73 ஆனாலும் அதே கம்பீரம்..
அவரை முடக்கவிடலாம் என்ற எண்ணத்தில் கைது செய்ய யோசித்த போதே அவரிடம் தோற்றுவிட்டார்கள் கழகத்தின் எதிரிகள் என்பதை தான் உணர்த்தியது அந்த சிரிப்பு.
நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். திமுக என்கிற மாபெரும் மக்கள் இயக்கம் எங்களுடன் இருக்கிறது அதன் தலைவர் தளபதி எங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கிறார் என்பதை உணர செய்தவர்களுக்கு நன்றி.
நேரிலும், தொலைபேசியிலும் முகநூலிலும் எங்களுக்கு ஆதரவு கொடுத்த நல் உள்ளங்களுக்கு நன்றி.
எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதையும் ஒரு கை பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக