ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

இசையமைப்பாளர் சலீல் சவுத்திரி வங்கத்தில் இருந்து வந்த இசைப்புயல்

 ராதா மனோகர் : இசையமைப்பாளர் சலீல் சௌத்திரி இசையில் காலத்தை வென்ற பெங்காலி பாடல் இது.
இதை ஹிந்தியிலும் சலீல் சவுத்திரி அவர்களே இசையமைத்துள்ளார். 
பலருக்கு இது பெங்காலி பாடல் என்று கூட தெரியாது . அந்த அளவுக்கு இது ஹிந்தியில் பட்டிதொட்டி எல்லாம் ஊடுருவிய பாட்டு 
ஒரு காதல் பிரிவு சோகத்தை இந்த பாடலில் அப்படியே வாழ்ந்து காட்டி உள்ளார் சலீல் சவுத்திரி அவர்கள்.
இந்துஸ்தானி பைரவ் ராகத்தில் அமைந்த பாடல் இது 
நாற்பதுகளில் வங்காளத்தில் நிலவிய கொடுமையான பஞ்சத்தில் வாழ்ந்து அதில் இருந்து  தப்பி பிழைத்த ஒரு மகான் இவர்.


மக்களின் வறுமையை  கண்டு மனம் நொந்த ஒரு மனிதனின் உள்ளம் அழுவதை இவரின் பல பாடல்களில் காணலாம்.
ஆரம்ப காலங்களில் இடது சாரி இயக்கங்களோடு சேர்ந்து இயங்கினார் 
பங்களாதேஷ் போராட்டத்தின் போது வங்காள சுதந்திர பாடல்களை எழுதி இசையமைத்து வங்காளிகள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார்.
இவருக்கு பங்களாதேஷ் நாடு மிக பெரிய வரவேற்பு கொடுத்து பட்டமும் அளித்தது.

கல்கத்தா பாம்பே என்று பறந்து கொண்டிருந்த இவர் செம்மீன் படத்திற்கு இசையமைக்க கேரளம் வந்தார்.
செம்மீன் பாடல் பதிவின் போது இவரின் கடைக்கண் பாடகர் யேசுதாஸின் மீது வீழ்ந்தது.
யேசுதாஸ் அகில இந்திய பாடகரானார்.
பெரும்பாலும் மலையாளத்தில்  பாடிக்கொண்டிருந்த யேசுதாஸ் இந்தி பாடகரானார்.
சலீல் சவுத்திரியை தொடர்ந்து இந்தி இசை ஜாம்பவான் ரவீந்திர ஜெயின் யேசுதாஸை இமயத்தின் உச்சிக்கே கொண்டுபோய் சேர்த்தார் 
திரு சலீல் சவுத்திரியை பாலு மகேந்திரா அழைத்து கொண்டுவந்து அழியாத கோலங்களுக்கு இசையமைக்க வைத்தார் 
இவரின் மலையாள இசையமைப்புக்களின் போது இவரது உதவியாளராக ஏ ஆர் ரஹ்மானின் அப்பா ஆர் கே சேகர் அவர்கள்தான் பெரும்பாலும் உதவியாளராக இருந்திருக்கிறார்.

ஹிந்தி திரையுலகம் விழுங்கி ஏப்பம் விட்ட முக்கியமான  மாநிலம் வங்காளம்.
வங்காள திரையுலகம் ஒரு காலத்தில் ஹிந்தி திரையுலகை விட புகழ் பெற்றிருந்தது 
சலீல் சவுத்திரி மட்டுமல்ல கிஷோர் குமார் போன்ற பல கலைஞர்கள் வங்காளிகள்தான் 
வங்காளம் போல அழிந்து கொண்டிருக்கும் மாநில மொழிகளோடு தமிழகம் ஒரு புரிந்துணர்வை உருவாக்க வேண்டும் . 
அவர்கள் பறிகொடுத்த திரை இசை நாடகம் போன்ற கலைத்துறையை மீட்டு எடுக்கும் முயற்ச்சியில் தமிழகமும் இதர தென்னாடும் பக்கபலமாக இருக்கவேண்டும்.
 
 

கருத்துகள் இல்லை: