செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

திமுக- காங்கிரஸ் உறவு முறிந்தால் என்ன நடக்கும்? ’துக்ளக்’ குருமூர்த்தியின் ஆரூடம்!

 மின்னம்பலம் - Mathi  :  திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ’துக்ளக்’ எஸ். குருமூர்த்தி தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
குருமூர்த்தி தமது எக்ஸ் பக்கத்தில்,
    திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவிர்க்க முடியாதபடி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் இருந்து திமுக வெளியேற்றப்படும்.
    ஆனால் விஜய்யின் தவெக வெற்றி பெறாது; பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.
    டெல்லியில் மோடிக்கு எதிராக இருந்த மிகவும் நம்பகமான கூட்டாளியை (திமுக) ராகுல் காந்தி இழந்து விடுவார்.
    காங்கிரஸ் எதிரியாக மாறினால், ராகுலை ஆதரித்து நின்ற திமுகவின் நிலைப்பாடு முட்டாள்தனமானதாகி விடும்.
    டெல்லியில் காங்கிரஸுக்கு திமுக தேவை; தமிழ்நாட்டில் திமுகவுக்கு காங்கிரஸ் தேவை.


    காங்கிரஸும் திமுகவும் ஒருவருக்கு ஒருவர் எதிராக மாறுவது என்பது இரு கட்சிகளுக்குமே முட்டாள்தனமான முடிவாகிவிடும்.
    இப்படியான முடிவு, ஒரு நண்பரை இழப்பது என்பது மட்டுமல்ல.. இரண்டு கட்சிகளுமே கூடுதலாக ஒரு எதிரியை உருவாக்கிக் கொள்வதற்கும் சமம்” என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: