புதன், 20 மே, 2020

ராஜீவ் படு கொலை .. வி பி சிங் பிரதமராவதை தடுத்தது . திமுகவை தோற்கடித்து ஈழத்துக்கு சவக்குழி தோண்டியது


வளன்பிச்சைவளன் :  பகுதி - 1
 ஊரைப் பகைக்கின் வேருடன் கெடும் உலகைப் பகைக்கின்?
சர்வதேச நாட்டு தூதர்கள் மீது  அர்டிலெறி தாக்குதல்!
தமிழகத்தில் ஈழப்போரட்டத்தை  முன்னிறுத்தி அரசியல் பிழைப்பு வாதம்.
ஈழ விடுதலைப் போராட் டத்திற்கான தார்மீக ஆதரவை மிகச்சரியாக முழுமையாக செய்த தமிழகம். தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் மூலம் தமிழக மக்களின் ஈழ விடுதலை ஆதரவுத் தளத்தை சிதைத்த விடுதலைப் புலிகள்.
ராஜீவ்படுகொலைக்குமுன் :
1983 ஈழத்தில் இனக் கலவரம் இந்திய அரசு தலையிட்டு படுகொலைகளைத் தடுக்க ஒரு மாத காலம் தமிழகம் போர் கோலம் பூண்டது இந்திய பிரதமர் இந்திரா காந்தி திமுக உறுப்பினர்களின் ஆவேச உரையைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை எனஅறிவி த்தார் தமிழ் இளைஞர்களுக்கு இந்திய அரசு இராணுவ பயிற்சி அளித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முகாம்கள் அமைத்தனர் ஈழத் தமிழ் இளைஞர்கள்.
தமிழகம் ஈழ விடுதலைப் போரா ட்ட த்தை வீறுகோள்ள வைத்த
தமிழக த்தின் வெற்றி.

திம்பு பேச்சுவார்த்தை இந்தியா மத்யஸ்தம் இலங்கை அரசுக்கும் ஈழ தமிழர் பிரதிநிதி களுக்கும். பேச்சு வார்த்தை தோல்வி இந்திய அரசு தன் மேலாண்மையை காட்ட ஈழத் தமிழ் தலைவர்களை நாடுகடத்த உத்தரவிட்டது திமுக தலைவர் கலைஞர் பத்து மணிநேர இடை வெளியில் பல லட்சம் மக்களை திரட்டி கண்டனத்தை தெரிவித் தார். தி.மு.க இரயில் மறியல் அறிவித்தது தெற்கு இரயில்வே இரயில் சேவையை ரத்து செய்தது இந்திய அரசு பணிந் தது. நாடு கடத்தல் உத்தரவை வாபஸ் பெற்றது. ஈழத் தமிழர் பிரதிநிதிகளை இந்திய அரசு நிர்பந்திக்க கூடாது என தமிழகம் எச்சரித்தது
ஈழ விடுதலை போராட்ட ஆதரவு தளத்தில் தமிழகம் அரணாயிரு ந்தது
தமிழீழத்தை என்றும் ஏற்றுக்கொள்ளாத எம் ஜி ஆர் பணத்தால் #தான்மட்டுமே என்ற எண்ணம் கொண்ட புலித் தலைமையை தன் வசப்படுத்தி தமிழக அரசியல் களத்திற்கு ஈழ விடுதலை போராட்டத்தை அரசியலாக்கினார். இதை தமிழக புலி ஆதரவாளர்கள் எம் ஜி ஆரை ஈழ விடுதலை காவல் தெய்வமாக சித்தரித்தனர் ஒன்றுபட்ட தமிழக ஈழ விடுதலை ஆதரவில் விரிசலைஏற்படுத்தினார் எம் ஜி ஆர்.
பெங்களூர் சார்க் மாநாட்டை யொட்டி ஈழ விடுதலை காவல் தெய்வம் புலித்தலைமை பிரபாகரனை கைது செய்து காவல் நிலையத் தில் ஒரு குற்றவாளியை ப் போல் கை ரேகைகள் எடுத்து நிற்க வைத்து பல கோணங் களில் புகைப் படம் எடுத்து அவமானப் படுத்தி வயர்லெஸ் கருவிகளை பறிமுதல் செய்து வீட்டுக் காவலில் வைத்தார் எம்ஜிஆர் எனினும் அவர் தான் ஈழ விடுதலை காவல் தெய்வம். இது தான் #தமிழகபுலிஆதரவாளர்அரசியல்
இந்திய இலங்கை ஒப்பந்தம் இதில் ஈழப் பிரதிநிதி யாக தான் மட்டும் கலந்து கொள்ள விரும்பிய புலித் தலைமை. ராசீவ் புலிகளுக்கு மாதம் ரூ 50 லட்சம் இந்திய ரூபாய்களாக தந்தது எல்லா இயக்கங்களிடமும் ஒப்பந்தத் தில் கையெழுத்து பெற்றது. இவை அனைத்தும் ஈழவிடு தலை காவல் தெய்வம் எம்ஜிஆர் ஆசியுடன் நடந்தது.
வடக்கு கிழக்கை ஒன்றாய் இணைத்து ஒரு மாகாணமாக்கி அதற்கு அதிகார பரவல் பெற தொடர்ந்து முயற்சி மேற் கொள்ள இந்திய அரசு உறுதி அளித்தது அனைத்து குழுக்களும் இடம் பெற இந்தியா முயற்சித்தது தான் மட்டுமே என்ற எண்ணம் கொண்ட புலித்தலைமை இதை ஏற்காமல் மக்களை தன் வசம் திருப்ப திலீபன் உண்ணாவிரத தத்தை அரங்கேற்றியது திலீபன் பலி யிடப்பட்டார். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட புலிகள் முன்பு யாழ் பல்கலை மாணவர் சாகும் வரை உண்ணாவிரத் போராட்டத்தை அவர்களை மீட்டு காத்தனர் ஆனால் திலீபன் விசயத்தில் அவரை கடைசி நிமிடங்களில் காப்பாற்ற முயற்சிக்க வில்லை . இதன் பின் அமைதிப்படை புலிகள் மோதல் வெடித்தது.
தமிழகம் இந்திய அமைதிப்படை வெளியேற போராடிய து தமிழக, இந்திய அரசியல் மாற்றம் கலைஞர் தமிழக முதல்வர் வி பி சிங் இந்திய பிரதமர் கலைஞரின் முயற்சியால் இந்திய படை ஈழத்தில் இருந்து முழுமையாக நாள் குறிப்பிடப் பட்டது. இந்திய அமைதிப் படை ஈழ மண்ணில் இருந்து முழுமையாக வெளி யேறியது சம்பிரதாயப் படி தமிழக முதல்வர் அமைதிப் படையை வரவேற்க வேண்டும் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் எனது தமிழ் உறவுக ளின் இரத்தம் தோய்ந்த கரங் களுடன் வரும் அமைதிப் படை யை வரவேற்க மாட்டேன் என்றார்
ஈழ விடுதலை ஆதரவு தளத்தில் தமிழகம் மீண்டும் பங்களிப்பை செய்தது.
தமிழத்தில் புலிகள் நிகழ்த்திய படுகொலை

வி பி சிங் பிரதமராக இருக்கும் வாய்ப்பை பயன் படுத்தி ஈழத்திற்கு தீர்வுகான கலைஞர் முயன்றார். வி பி சிங் இல்லத்தில் அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து ஈழ நிலவரம் குறித்து பேசினார்.
அதே நேரம் சென்னையில் ஈபிஆர்எல்எஃப் தலைவர் பத்ம நாபாவை சென்னையில் வைத்து புலிகள் சுட்டு கொலை செய்தனர் கலைஞர் பாதியிலே சென்னை திரும்பினார். அந்த பேச்சு வார்த்தைக்கு இப் படுகொலை மூலம் முட்டுக் கட்டை போட்டனர் புலிகள்
தமிழக மண்ணில் படுகொலை நிகழ்த்தி அதன் மூலம் திமுக ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணம் ஆயினர்.
தமிழக அரசியலில் ஒரு பக்க சார்போடு புலிகள் செய்த மிக மோசமான நடவடிக்கை.
1991 தேர்தல் பிரச்சார த்திற்கு சென்னை வந்த ராஜீவ் புலிகளால் படுகொலை செய்யப் பட்டார் ஏற்கனவே திமுக ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணமான புலிகள் தேர்தல் நேரத்தில் இப் படுகொலை நிகழ்த்தி திமுக வின் வெற்றி வாய்ப்பை பறித்து தமிழக அரசியலில் பங்காற்றி ஜெயலலிதா வை தமிழக முதல்வராக்கினர்.
ராசீவ் படு கொலைக்குப்பின்
நாடு கடத்தல் உத்தரவிற்கே போராடி திரும்பப் பெற வைத்த தமிழகத்தில்
#விடுதலைபுலிகளுக்குதடை அறிவிப்பு செய்யப் பட்டது இது குறித்து எந்த வித சிறு சலனமும் தமிழகத்தில் இல்லை. ஏன் இந்த தலைகீழ் மாற்றம் இது எப்படி சாத்தியமானது. தமிழக மக்கள் படுகொலை களை அங்கீகரிப்பது இல்லை அதுவும் தங்களிடம் ஆதரவு பெற வந்தவர்கள் தங்கள் மண்ணில் நிகழ்த்திய கொலையை கண்டித்தனர். திமுக புலிகளோடு இணைந்து ராசீவை கொன்றனர் என்ற பொய் பிரச்சாரத்தை நம்பி மக்கள் திமுக வை துண்டித்தனர் திமுக வினர் சொத்துக்கள் சேதப் படுத்தப் பட்டன ஜெயின் கமிஷன் விசாரணை என திமுக வை முடக்கும் முயற்சி களும் நடந்தன. இவ்வளவு இழப்புகளை திமுக புலிகள் செய்த படுகொலையால் அனுபவித்து இருந்தாலும். கடைசி வரை இதற்கு புலிகள் வருத்தம் தெரிவிக்க வில்லை இதைப் பற்றி வாய் திறக்காமல் இருப் பதே #தமிழக ஈழ #ஆதரவாளர்அரசியல்
இதன் பின்னான காலக் கட்டத்தில் #ஒரேகட்சி
ஆட்சி என்ற தளத்தை நோக்கி புலிகள் அனைத்து அறப் போராளி ஆயுதப் போராளி குழுக்களை அழித்தொழித்து தானே ஈழத்தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி என படுகொலை களால் பிரகடனப் படுத்தி கொண்டனர். தடை செய்யப் பட்ட இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாததால் இந்தியா சமாதான பேச்சுக் களை முன்னெடுக்க வில்லை
இந்திய #தலையீடு
இருந்த வரை தமிழகம் ஈழ விடுதலைக்கு  அரணாய் இருந்து பாதுகாத்து.
தொடரும்..

கருத்துகள் இல்லை: